Tag Archive: சூரன்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 46

பகுதி 10 : சொற்களம் – 4 சூரியன் குந்தியின் மாளிகைக்குப் பின்னால் இருந்தமையால் முற்றம் முழுக்க நிழல் விரிந்து கிடந்தது. கிருஷ்ணனின் தேர் முற்றத்தில் வந்து நின்றபோது காவலர்தலைவன் வந்து வணங்கி “யாதவ அரசி பின்பக்கம் அணிமண்டபத்தில் இருக்கிறார்கள். தங்களை அங்கே இட்டுவரும்படி ஆணை” என்றான். கிருஷ்ணன் இறங்கி சால்வையை சீராகப்போட்டபடி நிமிர்ந்து நிழலுருவாக நின்ற மூன்றடுக்கு மாளிகையை நோக்கினான். மரத்தாலான அதன் மூன்று குவைமுகடுகளில் மையத்தில் துருபதனின் விற்கொடி பறக்க அருகே இடப்பக்கம் மார்த்திகாவதியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73014

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29

இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில் மனிதர்களை ஊட்டி வளர்ப்பதற்காக பூமியன்னையே பசுக்களின் வடிவெடுத்து வந்தாள் என்றனர் முனிவர்கள். பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்றனர். ஆயர்களிலிருந்தே பிற அனைத்துக்குலங்களும் உருவாகி வந்தன என்று புராணங்கள் சொல்லின. ஆரியவர்த்தத்தின் ஆயர்குலங்களை யாதவர்கள் என்றனர். அவர்கள் யயாதியின் மைந்தனான யதுவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47091