Tag Archive: சு. வேணுகோபால்

சு.வேணுகோபால், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,   சு வேணுகோபால் என்றபெயரை அவ்வப்போது கேள்விப்பட்டு வந்திருந்தாலும் நான் அவரது எந்த ஆக்கத்தையும் இதுகாறும் வாசிக்க நேரிட்டதில்லை. ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் தமிழினி மையத்திற்குச் சென்றபோது அவரது சிறுகதைத்தொகுதி ஒன்றை வாங்கும்படி அந்த பதிப்பாளர் என்னை கேட்டுக்கொண்டார். அவ்வாறு கேட்டுக்கொள்வது சரியல்ல என்று எண்ணியமையால் நான் வாங்கவில்லை. அந்த பதிப்பாளருக்கு வேண்டிய அல்லது அவரே எழுதும் நூல்களை மட்டுமே பொதுவாக அங்கனம் வருந்தி விற்பது வழக்கம். அவை தரமானவையாக இருப்பதுமில்லை.   ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5520

சு.வேணுகோபாலின் மண் 2

சு.வேணுகோபாலின் புதியகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பான வெண்ணிலை தமிழில் வெளிவந்த மிக முக்கியமான சில சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று. ஒரு லௌகீக முதியவனுக்கே உரிய பார்வையைக் கொண்டவை இக்கதைகள் என இந்நூலின் அட்டைக்குறிப்பு மிகச்சரியாகவே இக்கதைகளை  அடையாளம் காட்டுகிறது. வேணுகோபாலின் ஆரம்பகாலக் கதைகளில் இருந்த வடிவசிதறல்கள் இல்லாமல் துல்லியமான யதார்த்தவாதச் சிறுகதைகளாக உள்ளன இவை.   தமிழில் பலவகையான வடிவச்சோதனைகள் நிகழும் இக்காலகட்டத்தில் எந்தவகையான சோதனைகளும் இல்லாமல் நேரடியான வாழ்க்கைச்சித்தரிப்பு காரணமாக, யதார்த்தத்தின் உக்கிரம் காரணமாக, அழுத்தமான கலைப்படைப்புகளாக ஆகும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5457

சு.வேணுகோபாலின் மண்-1

சு.வேணுகோபாலின் கதைகளைப்பற்றி எப்போதுமே இருவகையான அபிப்பிராயங்கள் நம் சூழலில் உலவுகின்றன. ஒன்று, அவர்மீது அபாரமன பிரேமை கொண்ட வாசகர்களின் தரப்பு. இன்னொன்று அவரது ஆக்கங்களை வாசிக்கவே முடியவில்லை என்று சொல்லும் தரப்பு. நம் சூழலில் எந்த ஒரு படைப்பாளிக்கும் இத்தகைய விசித்திரமான ஒரு எதிர்வினை இல்லை என்றே படுகிறது. காரணம் சு.வேணுகோபால் கதைகள் வாசகனுக்கு ஆரம்பத்தில் ஒரு தத்தளிப்பை அளிக்கின்றன என்பதே. அவை சித்தரிப்பில் நேர்த்தியோ இலக்கோ இல்லாதவை. மனதில் அகப்படுபவற்றையெல்லாம் எழுதிக்கொண்டு செல்கிறார் என்ற எண்ணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5451

‘வெண்ணிலை’,’காவல்கோட்டம்’—விருதுகள்

    திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் விருதுகள் இவ்வருடம் சிறுகதைக்கு சு.வேணுகோபால் எழுதிய ‘வெண்ணிலை‘ தொகுப்புக்கும் நாவலுக்கு சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல்கோட்டம்‘ நாவலுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரம் பெறுமானமுள்ள விருதுகள் இவை.     ‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1743

» Newer posts