Tag Archive: சு.ரா நினைவின் நதியில்

நுண்மைகளால் அள்ளப்படுவது…

2011ல் கன்யாகுமரியில் காலச்சுவடு சார்பாக நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் நான் பங்கெடுக்க நேர்ந்தமைக்குக் காரணம் பி.ஏ.கிருஷ்ணன். அவரது ‘திரும்பிச்சென்ற தருணம்’ என்ற நூலை நான் வெளியிட்டு பேசவேண்டுமென கேட்டுக்கொண்டதுதான். மற்றபடி காலச்சுவடு கூட்டங்களை நான் எங்காவது வாசித்துத் தெரிந்துகொள்வதுடன் சரி. நிகழ்ச்சி கன்யாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடந்தது. பெரும்பாலான பார்வையாளர்கள் வெளியூர்களில் இருந்து வந்த காலச்சுவடு வாசகர்கள் மற்றும் அன்பர்கள் நான் சென்றபோது மதியம். கூட்டம் காலைமுதலே நடந்துகொண்டிருந்தது. உள்ளே செல்ல அனுமதி உண்டா என்ற ஐயத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41296