Tag Archive: சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித் ஓர் உரையாடலில் சொன்னார் ‘ கதை மாதிரி எதாவது எழுதிப்பாக்கலாம்னு நினைக்கிறேன்’ அப்போது அவரது இரண்டு சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருந்தன. சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பூமணி தலைமுறைக்குப்பின் வந்த படைப்பாளிகளில் முக்கியமானவர். முன்னோடிகள் உருவாக்கிய வடிவங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்துசெல்லமுயன்றவர்களில் ஒருவர். அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் கதைக்கட்டு [Plot] உணர்ச்சிகரம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் சரியான பொருளில் கதைகள் அல்ல. அவற்றுக்கு தொடக்கம் முதிர்வு உச்சம் என்னும் வளர்ச்சிப்பாதை இல்லை. அவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42692

சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’

  சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் இலக்கிய நுட்பம் ஒன்றின் பிரதிநிதி. குறைத்துச் சொல்லுதல், முடியுமென்றால் சொல்லாமலேயே இருந்துவிடுதல், என்னும் கலைப்பாணி அது. அவரது அலையும்சிறகுகள் என்னும் முதல்சிறுகதைத்தொகுதி எண்பதுகளின் தொடக்கத்தில் அதன் ‘கதையற்ற தன்மை’க்காகவே கவனிக்கப்பட்டது சுரேஷ்குமார இந்திரஜித்தின் உலகம் பெரிதும் நகர்சார்ந்தது. மனிதமுகங்கள் இருக்கும், கதாபாத்திரங்களாக அவை வரையறைசெய்யப்பட்டிருக்காது. இடங்கள் இருக்கும், அவை மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களைச் சுமந்துகொண்டிருக்காது. உளவியல் அவதானிப்புகள் இருக்கும், உளமோதல்களின் நாடகத்தனம் இருக்காது. நிகழ்வுகள் இருக்கும் கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83829

கண்களில் மின்னுவது

சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஒரு கதை இப்படி ஆரம்பிக்கிறது ’நான் உறையிட்ட கத்தியை இடுப்பில் செருகிவைத்திருக்கிறேன். மருமகள் வீட்டிலிருந்து சாப்பாடு வருகிறது. எங்கள் குடும்பம் உருக்குலைந்து போய்விட்டது’ கதையின் முதல் பத்தி இதுதான். இது கதையின் மொத்தத்தையும் சொல்லிவிடுகிறதென்பதை மீதிக்கதையை வாசிக்கையில் அறியலாம். அடுத்த பத்தி இப்படி ஆரம்பிக்கிறது ‘நான் முதலிலேயே மேகலாவிடம் கூறினேன். அந்தப்பையன் சரியில்லை. அவன் அப்பா ஒச்சாத்தேவர் வம்புதும்புக்கு போகிற ஆள்…’ சுரேஷ்குமார இந்திரஜித் எழுதும் எல்லா கதைகளும் இந்தவகை நடையில் இதே சித்தரிப்புமுறையில்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37398