Tag Archive: சுரேந்திரகுமார்

காகிதக்கப்பல் பற்றி..

அன்புள்ள சுரேந்திரகுமார் உங்கள் கதையைச் சிறுகதை என்று சொல்லமுடியாது. ஆனால் உருவகக் கதை அல்லது நையாண்டிக்கதை என்று சொல்லலாம். அத்தகைய கதைகளுக்கு இலக்கியத்தில் ஓர் இடம் உள்ளது. அது நீளமானதாக இல்லாமல் சுருக்கமாகச் சொல்லக்கூடியதாக இருக்கும்போது. அதன் மையம் எந்த அளவுக்கு தைக்கும்படி இருக்கிறதோ அந்த அளவுக்கு அது வலிமையானதாக இருக்கும். உங்கள் கதையின் மையமே ‘இந்தியாவிலிருந்து வரும்’ கப்பலுக்கும் பிள்ளைகள் விடும் காகிதக்கப்பலுக்கும் இடையே நீங்கள் உருவாக்கியிருக்கும் மௌனமான தொடர்புதான். அதில் உள்ள மெல்லிய , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36338

காகிதக்கப்பல்-சுரேந்திரகுமார்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ காகிதக்கப்பல் கதையா கவிதையா என்று தெரியாத ஒரு வடிவில் இருப்பதே அதன் அழகு. ஒரு சிறந்த உருவகக்கதை அது. இலங்கை ஒரு சிறிய தீவு என்ற ஒரு பிரக்ஞை அங்குள்ள குழந்தை மனதில்கூட உள்ளது. அருகே உள்ள இந்தியநிலம் பற்றி அவர்கள் ஒரு நம்பிக்கையைக் கொண்டிருப்பது அதனால்தான். பெருவெள்ளம் வந்தால் இந்தியாவில் இருந்து கப்பல் வரும் என்று அம்மா சொல்லிக்கொடுப்பதைப்பற்றி நினைக்கையில் சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை நல்லவேளை மழை நின்றுவிட்டது சண்முகம் மதுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38074

புதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்

மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை, இரண்டு நாளில்லை ஒரு வாரமாய் கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு…! எனது சின்னப் பொண்ணு நித்யா வீட்டுக்கு முன்னே வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள். இந்த மழையையும் அவளையும் பார்க்கும்போது என் எட்டாவது வயதில், நான் வாழ்ந்த ஊரில் பெய்த மழையும், அதன் பின்னர் வெள்ளக்காடாகிய எங்கள் வீடும் ஞாபகத்திற்கு வருகிறது. “உங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்டா பள்ளிக்கூடமும் இல்லை படிப்பும் இல்லை, நல்லா மழையில கூத்தடிச்சுக் கொண்டு திரியுங்கோ…” அம்மாவின் பேச்சை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36335

சுரேந்திரகுமார்

பெயர்: க.சுரேந்திரகுமார் வயது : 30 பணி: மென்பொருள் பொறியியலாளர் (Sathiam Pvt Ltd, Jaffna) வசிப்பிடம்: யாழ்ப்பாணம், இலங்கை மொபைல்: 094752479824 மின்அஞ்சல்: [email protected] வலைப்பூ: www.moongilvanam.blogspot.com முகப்புத்தகம்: facebook.com/surenthirakumar உண்மையில் நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். சரியான வழிகாட்டுதல்கள் இருந்தால் என்னாலும் சிறந்த படைப்புக்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் வாழும் ஈழத்தில் பலநூறு கதைகள் இருக்கின்றன எழுதுவதற்கு. நன்றிகள் சுரேந்திரகுமார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/36741