Tag Archive: சுருதசன்மர்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 35

பகுதி 8 : நச்சு முள் – 4 பூரிசிரவஸ் காவல்மாடத்தைவிட்டு கீழே வந்தபோது தன் உடலை கால்கள் தாங்காத அளவுக்கு களைத்திருந்தான். படிகளின் முன்னால் நின்று சேவகனிடம் குதிரையை கொண்டுவரும்படி அவனால் கையசைக்கவே முடிந்தது. ஏறிக்கொண்டு குதிகாலால் மெல்லத்தொட்டபோதே அவன் எண்ணத்தை உணர்ந்துகொண்டதுபோல அது மெல்ல எதிர்த்திசை நோக்கி செல்லத் தொடங்கியது. படையணிவரிசைகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது அவன் சூழலை சற்றும் உணரவில்லை. அவனைச் சுற்றி ஓசைகள் அடங்கிக்கொண்டிருந்தன. படைகள் குழம்பித்தேங்கின. ஆணைகள் பல திசைகளிலும் ஒலித்துக்கொண்டிருந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72399

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 34

பகுதி 8 : நச்சு முள் – 3 பெருமுரசம் ஒலிக்கத்தொடங்கும்வரை பூரிசிரவஸ்ஸின் எண்ணங்கள் சிதறிப்பரந்துகொண்டிருந்தன. எங்கோ ஒரு கணத்தில் இங்கே என்னசெய்கிறோம், யாருக்காக என்ற எண்ணம் வந்து உடனே திரும்பிச்சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்ததுமே அவனுடைய அழகிய மலைநிலம் நினைவுக்கு வந்து அக்கணமே கிளம்பிவிடுவான் என்ற புள்ளியை அடைந்து பெருமூச்சுடன் மீண்டான். அவ்வண்ணம் கிளம்ப முடியாது என உணர்ந்ததுமே எதற்காக அந்த வாக்குறுதியை துச்சளைக்கு அளித்தோம் என வியந்துகொண்டான். அது எவ்வகையிலும் எண்ணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72319