Tag Archive: சுரபி

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6

பகுதி ஒன்று : பாலைமகள் – 6 தன் அறைக்குத் திரும்பியதுமே பூர்ணையிடம் நடந்ததை சொல்லிவிட்டு தேவிகை மஞ்சத்தில் படுத்தாள். துயில் வராதென்றே உள்ளத்தின் அலைக்கழிப்பு காட்டியது. அறைக்குள் நின்றிருந்த பூர்ணையிடம் “நானும் உடன்செல்கிறேன். நெடுநாட்களுக்குப்பின் அஸ்தினபுரிக்குள் நுழைவதுதான் என்னை அலைக்கழிக்கிறதா?” என்றாள். “ஆம், அரசி” என்று பூர்ணை சொன்னாள். சுரபி உள்ளே வந்து “பயணத்திற்கான அனைத்தையும் ஒருக்கிவிட்டேன், அரசி” என்றாள். “நீ என்னடி நினைக்கிறாய்?” என்றாள் தேவிகை. “எதைப் பற்றி?” என்றாள் சுரபி. “நான் ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104542

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5

பகுதி ஒன்று : பாலைமகள் – 5 தேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை வாங்கி கூர்ந்து நோக்கியபின் குழப்பம் விலகாமலேயே தலையசைத்தான். தேர் நகருக்குள் நுழைந்தபோதுதான் அத்தனை சிறிய ஊர் அது என தேவிகை உணர்ந்தாள். ஒரு சிறிய பெட்டிக்குள் நுழைந்ததுபோலத் தோன்றியது. பெரிய சகடங்கள் கொண்ட தொலைபயணத் தேரில் இருந்து நோக்கியபோது அத்தனை கட்டடங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104537

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4

பகுதி ஒன்று : பாலைமகள் – 4 தேர் மீண்டும் விடுதியை அணுகி விரைவழிந்தபோது மூவருமே சிறுசாளரங்களினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தனர். மிகத் தொலைவிலேயே தேவிகை அங்கே பூரிசிரவஸின் புரவிகள் நிற்பதை கண்டுவிட்டாள். அருகில் அவனுடைய படைவீரன் ஒரு புரவியின்மேல் பொதிகளை கட்டிக்கொண்டிருந்தான். “கிளம்பப்போகிறார்கள்” என்றாள் பூர்ணை. “கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள், நெடுநேரமாக” என்றாள் சுரபி. தேவிகை நெஞ்சு படபடக்க அதை பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் பூர்ணையின் கையைத் தொட்டு “ஏன் வந்தோம் என உணரத்தொடங்கிவிட்டேன், பூர்ணை” என்றாள். “என்ன சொல்கிறீர்கள், அரசி?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104513

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3

பகுதி ஒன்று : பாலைமகள் – 3 சாயாகிருகத்திலிருந்து முதற்புலரியிலேயே தேவிகை சேடியருடன் கொடியில்லாத சிறுதேரில் கிளம்பி இருள் செறிந்துகிடந்த கிரிபதம் என்னும் வணிகச்சாலையினூடாக சென்றாள். தெற்கே கங்கையின் கரையிலமைந்த வாரணவதம் என்னும் துறைநகரிலிருந்து கிளம்பி யமுனையையும் திருஷ்டாவதியையும் பயோஷ்ணியையும் கடந்து வடக்கே இமயமலையடிவாரத்திலமைந்த திரிகர்த்தத்தின் தலைநகரமான பிரஸ்தலை வரை செல்லும் அந்தப் பாதை மாமன்னர் ஹஸ்தியின் காலத்தில் அமைக்கப்பட்டது. சம்வரணர் அதை அகலப்படுத்தி சாவடிகளை மும்மடங்காக்கினார். மலையுச்சிகளில் நூறு காவல்மாடங்களை உருவாக்கி அவற்றின் ஆணைக்கேற்ப விரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104509

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1

பகுதி ஒன்று : பாலைமகள் – 1 அஸ்தினபுரிக்கு வடமேற்கே கள்ளிப்புதர்களும் முள்மரங்களும் மண்டி மானுடரில்லா செம்மண்வெளியாகக் கிடந்த தொல்நிலமாகிய குருஷேத்ரத்தின் வடமேற்கு எல்லையில் இருந்த புண்டரீகம் என்னும் சிறிய சுனையில் நீராடுவதற்காக சிபிநாட்டரசி தேவிகை தன் தோழியரான பூர்ணையுடனும் சுரபியுடனும் வந்தாள். சிபிநாட்டிலிருந்து கொடியடையாளங்கள் இல்லாத எளிய பயணத்தேரில் ஏழு சிந்துக்களை கடந்து அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்து எல்லையிலமைந்த சாயாகிருகம் என்னும் சிற்றூரின் காவல் மாளிகையில் இரவு தங்கி அங்கிருந்து முதற்புலரியில் கிளம்பி குருஷேத்ரத்திற்குள் நுழைந்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104460