குறிச்சொற்கள் சுபாகு
குறிச்சொல்: சுபாகு
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 12
அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8
சகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்... பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55
போர் தொடங்குவதற்கான முரசு ஒலித்ததும் தன்னை அறியாமலேயே “எழுக! எழுக!” என கையசைத்து அம்புகளைத் தொடுத்தபடி சுபாகு பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவிச்சென்றான். அவனை எதிர்த்து வந்த பாஞ்சால இளவரசர்களை அம்புகளால் அடித்து பின்னடையச்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54
அஸ்தினபுரியின் வில்லவர் படையொன்றை தலைமை தாங்கி தேர்த்தட்டில் வில்லுடன் நின்று பாண்டவப் படையை நோக்கிக்கொண்டிருந்தபோது சுபாகு தன்னை அறியாமலேயே விந்தையான ஓர் உளமலர்வை அடைந்தான். சிற்றகவையிலேயே அவன் உள்ளத்தில் இருந்த ஆழ்கனவு அது....
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41
புலரிச்சங்கொலி எழுந்தபோது கௌரவப் படைகளுக்குள் எந்த அசைவும் ஏற்படவில்லை. சுபாகு தலையில் பாயாலான மழைமூடியை கவிழ்த்துக்கொண்டு காவல்மாடத்தின்மீது சாய்ந்த மழைச்சரடுகளுக்கு சற்றே குனிந்து உடல்கொடுத்து நின்றிருந்தான். புலரிமுரசு அமைந்த பின்னரும் படை அசைவிலாதிருக்கக்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-37
சுபாகு துரியோதனனின் குடிலை அடைந்தபோது உள்ளிருந்த மருத்துவ ஏவலன் வெளியே வந்தான். அவன் சுபாகுவைக் கண்டதும் திடுக்கிட்டு நின்று பின் தன் மூச்சை சேர்த்துக்கொண்டு “வணங்குகிறேன், அரசே” என்றான். “மூத்தவர் என்ன செய்கிறார்?”...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36
ஆறாவது களமான குமரியில் அமர்ந்திருந்த சூதரான விசுத்தர் தாழ்ந்த குரலில் அகன்ற தோற்பரப்பு கொண்ட கிணைப்பறையை சுட்டுவிரலால் சுண்டி புலி உறுமுவது போன்ற மெல்லிய ஓசையை எழுப்பி பாடினார். அவருடன் இணைந்துகொண்ட பிற...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29
சுபாகு தன்னிலை உணர்ந்தபோது துச்சாதனனின் இறப்பு விண்ணில் முரசொலித் தொடராக பரவியிருந்தது. அவன் முன்விழிப்பு நிலையில் அந்த முரசொலியை வேறேதோ இறப்பறிவிப்பு என எண்ணினான். மெல்ல மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தபோது “இளைய கௌரவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28
துச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரை திருப்புக... மூத்தவரிடம் செல்க!” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84
துரியோதனன் அந்தக் கணத்தை பின்னரும் பலமுறை எண்ணி எண்ணி வியந்தான். மச்சர்களுடன் நிகர் நின்று பொருதிக்கொண்டிருந்தபோது எண்ணம் ஏதும் இன்றி அவன் வில் தாழ்த்தி செயலிழந்தான். உள்ளத்தில் ஒரு சொல் எஞ்சவில்லை. உடலெங்கும்...