Tag Archive: சுபத்திரை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50

பகுதி ஏழு : தீராச்சுழி – 6 பூர்ணை ஓர் ஒவ்வாமை உணர்வை அடைந்து அது என்ன என்று வியந்துகொண்டிருக்கையிலேயே தொலைவில் சகடத்தின் ஓசையை கேட்டாள். அது என்ன என்று உடனே அவளுக்குப் புரிந்தது. பதற்றத்துடன் எழுந்து நின்றாள். ஏவலன் புரவியிலிருந்து இறங்கி அருகே வந்து “வணங்குகிறேன், செவிலியே… முனிவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவள் “அரசியிடம் சொல்வதற்கு முன்னர் இளைய யாதவருக்கு தெரிவிக்கவேண்டும்” என்றாள். “ஆம், அதுதான் என் குழப்பம்… இவரை அழைத்துவரும் செய்தி இங்கே எவருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127266

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49

பகுதி ஏழு : தீராச்சுழி – 5 பூர்ணை குடிலிலிருந்து வெளியே வந்து சில கணங்கள் வெறும் வெளியை நோக்கியபடி நின்றாள். பின்மாலையின் சாய்வெயிலில் மரக்கிளைகள் ஒளிகொண்டிருந்தன. காட்டுக்குள் சாய்ந்திருந்த ஒளிச்சட்டங்கள் அங்கு அசையா நெருப்பு நின்றிருப்பதுபோல் தோன்றச் செய்தன. பறவைகளின் ஒலிகள் மாறுபட்டு கான்முழக்கம் கார்வை கொண்டிருந்தது. குடில் நிரைகளில் இருந்த ஏவலர்கள் பேசும் ஒலிகளும் பின்முழக்கம் ஒன்றைச் சூடியிருந்தன. குடில் முன் நின்றிருந்த புரவி அரைத்துயிலில் தலையை நன்கு தாழ்த்தி ஏதோ எண்ணத்திலாழ்ந்திருந்ததுபோல் உறைந்திருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127286

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48

பகுதி ஏழு : தீராச்சுழி – 4 இளைய யாதவர் வரும்போது பூர்ணை சுபத்திரையின் குடில் வாயிலில் நின்றிருந்தாள். இளைய யாதவர் தேரில் வருவார் என்று அவள் எண்ணினாள். அவர் தொலைவில் நடந்து வருவதைக் கண்டதும் மெல்லிய திகைப்பு ஏற்பட்டது. அவர் களைத்து தனித்து வருவதாக முதலில் தோன்றியது. ஆனால் அணுகுந்தோறும் இளமை கொண்டு சிறுவனென்றாகிவிட்டதாக விழிகள் மயங்கின. தலையிலிருந்த பீலி காற்றில் அசைந்தது. இருபுறமும் நோக்கி, அவ்வப்போது நின்று கூர்ந்து பார்த்து, முகம் மலர தனக்குள் மகிழ்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127275

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47

பகுதி ஏழு : தீராச்சுழி – 3 பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து வெளியே வந்தாள். அங்கு நின்றிருந்த மருத்துவர் அவளுக்கு முகமறியாதவராக இருந்தார். அவர் மீண்டும் தலைவணங்கி “நான் தங்களைத்தான் பார்க்க வந்தேன். அரசியர் இருக்கும் நிலையை நான் அறிவேன். தாங்கள் ஒருமுறை எங்கள் அரசியை வந்து பார்க்க இயலுமா?” என்றார். பூர்ணை திரும்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127251

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 1 காசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச் சுழற்றியபடி, தனக்குள் ஓரிரு சொற்களை முனகியபடி, அவ்வப்போது கீழே விரிந்துகிடந்த முற்றத்தை எட்டி நோக்கியபடி காத்திருந்தாள். அரைவட்ட முற்றத்தில் நின்றிருந்த ஏழு புரவிகளும் காற்றில் திரை அசைந்த மூன்று பல்லக்குகளும் பொறுமையிழந்தவைபோல, ஏதோ காற்றில் மண்ணிலிருந்து எழுந்துவிடப்போகின்றவைபோலத் தோன்றின. இருபத்திரண்டு தலைமுறைகளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106336

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27

[ 6 ] இந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும் பிறிதொருகுடைக்கீழ் முடிதாழ்த்தமாட்டார்” என்றாள். விஜயை “அரசர்களில் எவரும் அதற்கு சித்தமாகமாட்டார்கள்” என்றாள். தேவிகை “முடிதாழ்த்தித்தான் அவையமரவேண்டும் என்பதில்லை. குருதியுறவுகொண்டவர்களும் மணவுறவுகொண்டவர்களும் நிகர்நிலையில் அவையமரமுடியும். இங்கு நிகழும் ராஜசூயம் அவர்களுக்கும் சேர்த்துதான்” என்றாள். “நன்று, பாஞ்சாலத்தரசியின் அவையில் சிபிநாட்டுக்கும் நிகரிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87131

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74

பகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81127

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69

பகுதி ஆறு : மாநகர் – 1 தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது. வெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80996

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68

பகுதி ஐந்து : தேரோட்டி – 33 தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது. கீழே சென்றதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80874

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67

பகுதி ஐந்து : தேரோட்டி – 32 சகடங்களின் ஒலி எழுந்து சாலையைச் சூழ்ந்திருந்த மாளிகைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்து முழக்கமெனச் சூழ சாலைகளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர்களையும் புரவிகளையும் பல்லக்குகளையும் விலங்குகளையும் பதறி இருமருங்கும் ஒதுங்கச் செய்தபடி பாய்ந்து முன்னால் சென்றது அர்ஜுனனும் சுபத்திரையும் சென்ற தேர். தேர்த்தட்டில் எழுந்து பின்பக்கம் நோக்கி நின்ற அர்ஜுனன் தன் வில்லை குலைத்து சற்று அப்பால் கையிலொரு பெரிய மரத்தொட்டியுடன் வந்து கொண்டிருந்த முதிய பணியானையின் காதுக்குக் கீழே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80867

Older posts «