Tag Archive: சுனீல் கிருஷ்ணன்

காந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்

  காந்தியின் வழிமுறை என்பது நடைமுறை லட்சியவாதம் சார்ந்தது. ‘சத்திய சோதனையில்’ அவர் பொதுப்பணத்தில் செயலபடும் அமைப்புகள் குறித்து எழுதும்போது அவற்றுக்கான தேவையை மக்கள் உணர்ந்தால் அது செயல்படும், அப்படியில்லை என்றால் அது மறைந்துவிடும், அதை செலவழித்து நிறுவக்கூடாது என சொல்கிறார். காந்திக்கு இருக்கும் இந்த நம்பிக்கை இயற்கை வைத்திய நம்பிக்கையுடன் சேர்ந்ததே. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பேரறத்தின் மீது நம்பிக்கை கொண்டார். காந்தியும் ஆயுர்வேதமும் சுனீல் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/129930/

தன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்

  நம்முள் ஆன்மீக பிரக்ஞை வளர வளர நாம் இவ்வுலகத்தில் இருக்கும் எல்லாவற்றோடும் நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம்.. ஆகவே சுரண்டல் அங்கு இல்லை. நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம். நம்மை நாமே குணப்படுத்திக் கொள்கிறோம்- டாக்டர். வெங்கிடசாமி, அரவிந்த் கண் மருத்துவமனை   லாரி பேக்கர் காந்தியை முதன்முதலாக சந்தித்த தருணத்தைப் பற்றி வாசித்ததுண்டு. இந்தியர்களுக்கு உகந்த கட்டுமானத்தை எழுப்புங்கள் என பேச்சு வாக்கில் காந்தி சொனனது அவருடைய வாழ்வை திசை மாற்றியது. வெரியர் எல்வினின் கதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129228/

நஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்

 நீலகண்டம் வாங்க சுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ் உடல்/உளக்குறை கொண்ட குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கலை யதார்த்தமாகச் சொல்லி நம் கண்ணீரை வரவழைக்கப் போகும் கதை என்பதே படிக்கத் துவங்கியதும் ஏற்படும் மனப்பதிவு. சரி, முதலிலும் இடையிலும் இந்த வேதாளம் விக்ரமன் விவகாரம் எதற்கு? யோசிக்காமல் படிப்போம்… பேக்மேன், கடலாமை கதை? இருக்கட்டும்…  திடீரென மெடியா, சுடலை நாடகம்?  ஓ, ஆசிரியர் உத்திகளை கைக்கொண்டு தான் சொல்ல வரும் கதையை ஒரு ‘நாவலா’க்க முயற்சிக்கிறார் போல. சரளமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129421/

சுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்

 நீலகண்டம் வாங்க சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது. இங்கு என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன். நீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127589/

செட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்

ஜெயமோகன் உப்புவேலி நூலை பற்றி எழுதிய அறிமுகத்தை வாசித்ததில் துவங்கியே ராய் மாக்சம் மீது இயல்பான மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு பக்க சார்பு இருத்தல் இகழ்ச்சி. ஒட்டுமொத்த மானுட குல மேன்மைக்கு முதற்படி தனிமனித/தேசிய/இன சுயவிமர்சனமாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுவதுண்டு. சுயவிமர்சனத்தின் வழியாகவே மனிதன் முதன்முறையாக பிறனை நோக்குகிறான், அவனுக்காக இறங்குகிறான், அவனிடத்தில் தன்னை நிறுத்தி பார்க்கிறான். அங்கிருந்தே அநீதிக்கு எதிரான முதல் குரல் புறப்படக்கூடும். ராய் சென்னையில் இறங்கியதிலிருந்தே நண்பர்கள் அவருடனான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72859/

இணையமும் நூல்களும்

இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும் சுருக்கமான குறிப்புகள், கவன ஈர்ப்பு கருத்துக்கள் மட்டுமே என்றார்கள். அதில் உள்ள உடனடி எதிர்வினைதான் அவ்வெழுத்தை வடிவமைக்கும் தூண்டுதல் என்றனர். எழுதுபவர்கள் கொஞ்சநாள் அந்த எதிர்வினையை முழுமையாகவே கவனிக்காமலாகிவிடவேண்டும். எத்தனை வாசகர்கள் என்பதை முற்றிலுமாக உதாசீனம் செய்துவிடவேண்டும் என நான் சொல்வேன். சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48646/

மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்

மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை. சுனில் கிருஷ்ணன் என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42879/

இராட்டை

நண்பர் சுனீல் கிருஷ்ணன் நடத்திவரும் காந்தி இன்று இணையதளம் இன்று தமிழில் காந்தியச்செய்திகளை நவீன நோக்கில் வாசிப்பதற்கான முக்கியமான மையமாக மாறியிருக்கிறது. இன்னொரு காந்திய இணையதளத்தை சுனீல் அறிமுகம் செய்திருக்கிறார். ‘இராட்டை’ காந்தியைப்பற்றிய புரிதலுக்கு உதவக்கூடிய முதன்மையான தளமாக வர வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/41675/

அறம் அறக்கட்டளை விருதுகள்

தமிழகத்தில் இணையம் பயன்படுத்துவோர் எப்படியும் ஒரு இருபது சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். அதிலும் காந்தியைப் பற்றி தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேர் இருந்துவிட முடியும்? சராசரியாக ஒரு நாளைக்கு நூற்றி ஐம்பது பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு கட்டுரையையும் குறைந்த பட்சம் நாற்பது பேர் வாசிக்கிறார்கள். இவைகளை கணக்கில் கொண்டால், இந்த தளத்திற்காக தினமும் குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது செலவழித்து வரும் எங்களின் சமூக பங்களிப்பு என்பது என்ன? இந்த தளத்தின் சமூக பங்களிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38755/

புதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்

பட்டணத்து அரவங்கள் வந்தடையமுடியாத புறநகர்ப்பகுதியின் ஒரு மூலையில் அவர்களின் வீடு இருந்தது. மின்சார ரயில்கள் கணப் பொழுதில் ஓடி மறையும் ஒரு ரயில்வே கேட்டில் மணிக்கணக்காக காத்து நின்று தான் அந்த பகுதிக்குள் நுழைய முடியும். பொறுமையிழந்து மெல்ல வண்டியைவிட்டிறங்கி, வண்டியை ஒருபக்கம் சாய்த்து நானொரு பக்கம் சாய்ந்து கேட்டின் அடிப்புறம் வழியாக புகுந்து வெளிவந்தேன். இளங்கோ இறங்கிச்சென்று மறுகரையில் காத்திருந்தான். “மாப்ள இடம் சரியா நெனவிருக்கா…? எங்கயோ பொட்டலுக்கு நடுவுல கூட்டிட்டு போனாங்க.” “அவரு ஃபோன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38230/

Older posts «