Tag Archive: சுனீல் கிருஷ்ணன்

செட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்

ஜெயமோகன் உப்புவேலி நூலை பற்றி எழுதிய அறிமுகத்தை வாசித்ததில் துவங்கியே ராய் மாக்சம் மீது இயல்பான மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு பக்க சார்பு இருத்தல் இகழ்ச்சி. ஒட்டுமொத்த மானுட குல மேன்மைக்கு முதற்படி தனிமனித/தேசிய/இன சுயவிமர்சனமாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுவதுண்டு. சுயவிமர்சனத்தின் வழியாகவே மனிதன் முதன்முறையாக பிறனை நோக்குகிறான், அவனுக்காக இறங்குகிறான், அவனிடத்தில் தன்னை நிறுத்தி பார்க்கிறான். அங்கிருந்தே அநீதிக்கு எதிரான முதல் குரல் புறப்படக்கூடும். ராய் சென்னையில் இறங்கியதிலிருந்தே நண்பர்கள் அவருடனான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72859

இணையமும் நூல்களும்

இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும் சுருக்கமான குறிப்புகள், கவன ஈர்ப்பு கருத்துக்கள் மட்டுமே என்றார்கள். அதில் உள்ள உடனடி எதிர்வினைதான் அவ்வெழுத்தை வடிவமைக்கும் தூண்டுதல் என்றனர். எழுதுபவர்கள் கொஞ்சநாள் அந்த எதிர்வினையை முழுமையாகவே கவனிக்காமலாகிவிடவேண்டும். எத்தனை வாசகர்கள் என்பதை முற்றிலுமாக உதாசீனம் செய்துவிடவேண்டும் என நான் சொல்வேன். சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48646

மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்

மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை. சுனில் கிருஷ்ணன் என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42879

இராட்டை

நண்பர் சுனீல் கிருஷ்ணன் நடத்திவரும் காந்தி இன்று இணையதளம் இன்று தமிழில் காந்தியச்செய்திகளை நவீன நோக்கில் வாசிப்பதற்கான முக்கியமான மையமாக மாறியிருக்கிறது. இன்னொரு காந்திய இணையதளத்தை சுனீல் அறிமுகம் செய்திருக்கிறார். ‘இராட்டை’ காந்தியைப்பற்றிய புரிதலுக்கு உதவக்கூடிய முதன்மையான தளமாக வர வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/41675

அறம் அறக்கட்டளை விருதுகள்

தமிழகத்தில் இணையம் பயன்படுத்துவோர் எப்படியும் ஒரு இருபது சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். அதிலும் காந்தியைப் பற்றி தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேர் இருந்துவிட முடியும்? சராசரியாக ஒரு நாளைக்கு நூற்றி ஐம்பது பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு கட்டுரையையும் குறைந்த பட்சம் நாற்பது பேர் வாசிக்கிறார்கள். இவைகளை கணக்கில் கொண்டால், இந்த தளத்திற்காக தினமும் குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது செலவழித்து வரும் எங்களின் சமூக பங்களிப்பு என்பது என்ன? இந்த தளத்தின் சமூக பங்களிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38755

புதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்

பட்டணத்து அரவங்கள் வந்தடையமுடியாத புறநகர்ப்பகுதியின் ஒரு மூலையில் அவர்களின் வீடு இருந்தது. மின்சார ரயில்கள் கணப் பொழுதில் ஓடி மறையும் ஒரு ரயில்வே கேட்டில் மணிக்கணக்காக காத்து நின்று தான் அந்த பகுதிக்குள் நுழைய முடியும். பொறுமையிழந்து மெல்ல வண்டியைவிட்டிறங்கி, வண்டியை ஒருபக்கம் சாய்த்து நானொரு பக்கம் சாய்ந்து கேட்டின் அடிப்புறம் வழியாக புகுந்து வெளிவந்தேன். இளங்கோ இறங்கிச்சென்று மறுகரையில் காத்திருந்தான். “மாப்ள இடம் சரியா நெனவிருக்கா…? எங்கயோ பொட்டலுக்கு நடுவுல கூட்டிட்டு போனாங்க.” “அவரு ஃபோன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38230

பாண்டிச்சேரியில்…

ஊழலுக்கெதிரான அண்ணா ஹசாரே போராட்டம் ஆரம்பித்த நாட்களில்தான் சுனீல் கிருஷ்ணன் நெருக்கமாக ஆனார். அதற்கு முன்னரே வாசகராக தெரிந்தவர்.காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறார். அவரது குடும்பம் அரிமளம் என்ற ஊரைச்சேர்ந்தது. அவரது முன்னோர்களும் தந்தையும் ஆயுர்வேத மருத்துவர்கள்.  அண்ணா ஹசாரேவுக்காக ஏதாவது செய்யவேண்டுமென ஆசைப்பட்டார். விளைவாக அவர் அண்ணா ஹசாரேவுக்காக ஓர் இணையதளத்தை ஆரம்பித்தார். பின்னர் அது காந்திக்கான இணையதளமாக ஆகியது. [சுனீல் கிருஷ்ணன் தம்பதி] காந்தி டுடே என்ற தளம் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வெளிவந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36701

ஓர் ஆயுர்வேதி

அன்புள்ள ஜெ உங்களை நாகர்கோயிலில் வந்து சந்தித்துச் சென்ற அனுபவத்தை என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன் http://edhuvumaethappuilla.blogspot.com/2011/06/blog-post.html சுனீல் கிருஷ்ணன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/16819

யோகமும் ஆயுர்வேதமும்

ஒரு பெரிய விந்தை என்னவென்றால் சரக ,சுஸ்ருத ,வாக் பட்ட முதல் 19 ம் நூற்றாண்டு வரை எழுத பட்ட எந்த படைப்பிலும் ஹட யோகம் ஆசன பிராணயாம மருத்துவ குணங்கள் பற்றி ஒரு வார்த்தை எழுத படவில்லை .

Permanent link to this article: https://www.jeyamohan.in/7313