Tag Archive: சுனாமி

அறிவியலுக்கென்ன குறை?

இந்திய அறிவியல் எங்கே என்ற கட்டுரையை வாசித்துவிட்டுப் பலரும் கருத்து சொன்னார்கள். அதில் நண்பர் வேணு அவர்கள் இந்த கடிதத்தொடர்பை அனுப்பியிருந்தார்கள். இதில் ஓர் அறிவியலாளரை நாம் காண்கிறோம். மக்கள் தொலைக்காட்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும். இதற்குமேல் நமக்கு என்ன தேவை? கண்களில் நீர் தளும்ப இதை எழுதுகிறேன் ஜெ நண்பர்களே, விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டின் சமகால விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பதை அவரே என்னைத்தொடர்பு கொண்ட மின்னஞ்சல் மற்றும் காணொளி இணைப்புகள் வழி அறிந்து பெருமிதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20504

லயா

லயா என்ற பேரிலான இத்திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது. 2004ல் சுனாமி அடித்த பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்க்கையை, இசையைப் பதிவுசெய்யும் நோக்கம் கொண்டது. மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, தமிழ்நாடு, மாலதீவுகள் எனப் பல பகுதிகளின் இசை பதிவாகியிருக்கிறது. உச்சம் என்றால் மாலத்தீவுகளின் கலைஞர்களின் உக்கிரமான தாள நிகழ்ச்சிதான். தமிழ்ப்பகுதியில் கே.ஏ.குணசேகரன் ‘ஜீவிதப்படகு கரைசேரணும்’ என்ற நல்ல பாடலை அழகான உணர்ச்சிகளுடன் பாடியிருக்கிறார். டிவிடியாக வாங்கக்கிடைக்கிறது.   http://www.linktv.org/programs/the-laya-project http://www.layaproject.com/layaproject/video.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/19361

சுனாமி : மீட்சியின் இதிகாசம்

சுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன. ஆனால் பொதுவாக இந்தியா என்ற வல்லமையைப்பற்றி என்றுமே என் மனதில் உள்ள சித்திரம் மிக மிக வலுப்பெற்றுள்ளது. * முதலில் உறுத்தல்கள். நாகர்கோவில் முதல் நெல்லை வரை சரத் குமார் ரசிகர்மன்றம் பதினாறுவண்ண ஆப்செட் படமாக அவர் சுனாமிக்காக கதறி அழுவதுபோல [அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/50

சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்

சுனாமி தாக்கிய இரண்டாவதுநாள் நான் மனம் சரியில்லாத நிலையில் ஒருநாள்முழுக்க அர்த்தமில்லாமல் சுற்றிக் கொண்டு சாப்பிடாமல் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்து சென்ற கேரளநண்பர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐயம். அவர்கள் முட்டம் செல்லவில்லை, போலீஸ் தடுத்துவிட்டமையால் நேராக திருவனந்தபுரம் சென்று விட்டார்கள், நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவல் மூன்றுநாட்கள் கழித்துதான் கூப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கு குழப்பம் ஏற்படுத்தியதை அவர்கள் பதற்றத்தில் மறந்துவிட்டார்கள். * மூன்றாம்நாள்முதல் அனேகமாக தினமும் நான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு தொடர்பான பணிகளுக்கானச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/52