Tag Archive: சுந்தரராமசாமி

தற்செயல்பெருக்கின் நெறி

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலம் தானே…மிக நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் கடிதம் மூலமாக உரையாடி… மற்றபடி உங்கள் தளத்தை முடிந்தவரை தினசரி வாசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்… வெண்முரசின் வரிசையினை இரண்டு வருடம் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.. நடுவில் எதிர்பாராமல் விடுபட்டு போய் விட்டது மீண்டும் துவங்க வேண்டும். சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதை உடனே உங்களிடம் சொல்லவேண்டும் எனத் தோன்றியது. அதான் கடிதம். நான் கடந்த ஒன்றரை மாதமாக திண்டுக்கல் வந்திருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97129

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்

பழைய கடிதங்களுக்காக தூசு படிந்த கோப்புகளை துழாவிக்கொண்டிருந்தேன். இக்கவிதைகள் அகப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே  மிக அந்தரங்கமான கவிதைகள். அன்றைய கொந்தளிப்பை மட்டுமே அவை வெளிப்படுத்துகின்றன. அப்பாவும் அம்மாவும் தற்கொலைசெய்துகொண்ட நாட்களின் குற்றவுணர்ச்சியை, தூக்கமின்மையை, தனிமையை இவ்வரிகள் மூலம் கடந்துசெல்ல முயன்றிருக்கிறேன். இக்கவிதைகள் மூன்றுக்கும் முக்கியமான பொது அம்சம் உண்டு. நான் இவற்றை சுந்தர ராமசாமிக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களில்தான் எழுதினேன். மூன்றாம் கவிதை மட்டும் அவர் நடத்திய காலச்சுவடு இதழில் 1988ல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2756

படைப்பில் காலம்

அன்புள்ள ஜெ. சில சந்திப்பின்போதுகூட கேட்கவேண்டும் என நினைத்தது இது. கேள்விகளின் அலைக்கழிப்பில் மறந்து போய்விடுகிறது. சமீபத்தில் உங்கள் சில சிறுகதைகளை வாசித்ததில் மீண்டும் துளிர்விட்டுவிட்டது. அசோகமித்ரன், சுந்தரராமசாமி, கிரா போன்றவர்களின் கதைகளில் கூட அதன் காலம் தெரிந்தோ தெரியாமலோ வலியுறுத்தப்பட்டிருக்கும். அப்பட்டமாகவே சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கும். இது இந்தக் காலத்தில் நடைபெறுகிறது. இத்தனை ஆண்டுகள் முன்னால் இப்படி இருந்திருக்கிறது என தோற்றம் ஏற்படுத்துகிறது. உங்கள் பழைய, புதிய கதைகளில் இது கவனமாக தவிர்க்கப்படுவதாக தெரிகிறது. எங்குமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36506

உரையாடலும் பிம்பமும்

திரு. ஜெயமோகன் சார் அவர்களுக்கு சற்றே நீண்ட கடிதம் தான். ஆனால் நான் இதை உங்களிடம் கூறியே ஆக வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன். கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்த உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. சந்திக்க முடியுமா என்று நண்பர் முரளியிடம் கேட்டபோது சனிக்கிழமை (22-12-12) பார்க்கலாம் என்றார். ஆனால் திடீரென்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வந்து, இப்போது போனால் சந்திக்கலாம். உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். உங்களுடனான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35188

அகம் மறைத்தல்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். 1991ஆம் வருடம், நான் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். தமிழக அரசு முதன் முதலாக, இறுதித்  தமிழ்த் தேர்வில் ஒரு கவிதை எழுதுவதைக் கட்டாயமாக்கி இருந்தது. அந்த அறிவிப்பு வந்த அடுத்த நாள், எங்கள் தமிழ் ஆசிரியர் (சு. சார்ஜ்), எங்கள் வகுப்பில் ஒரு கவிதைப் போட்டி வைத்தார். அதில், “அன்பு மக்களின் அம்பு , அது மனிதனை ஆண்டவனாக்கும் பண்பு”, என்ற ரீதியில் எழுதிருந்த என் (முதல்) “கவிதைக்கு” இரண்டாம் பரிசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32419