Tag Archive: சுதேவர்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82

81. முகம்பரிமாறல் சேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன் உதடுகளை நீட்டி கழுத்துத் தசை அதிர இளவரசியை கண்டித்தாள். ஒருகணத்தில் முக்தன் அவள் வசையுரைப்பது சைரந்திரியைத்தான் என்று புரிந்துகொண்டான். சைரந்திரி அரசியை நோக்காமல் இயல்பாக மேடையில் விழிகொண்டிருந்தாள். விறலி நீர் அருந்தி வாயில் மிளகுகளை போட்டுக்கொண்டாள். அவளுடனிருந்தவள் முழவின் பட்டைகளை இழுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101270

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 52

பகுதி ஏழு :நச்சாடல் 1 மகதத்தின் பெரும்படகு கரிய அலைகளுக்கு அப்பால் நீர்வழிந்த தடங்களை அணிந்துநிற்கும் செங்குத்தான பாறைபோல் தெரிந்தது. கர்ணனின் படகு அணுகிச்சென்றபோது அது குகைக்கூரை போல சரிந்து மேலேறியது. நீரில் நின்ற தடங்கள் வரிகளெனப் படிந்த அதன் பேருடலுக்குள் இருந்து தேரட்டையின் கால்களென துடுப்புகள் நீண்டு நீரில் நடந்தன. அவன் படகு பெரும்படகின் அலைகளால் விலக்கித்தள்ளப்பட்டது. அவன் மேலே நோக்கி கைகாட்ட அங்கிருந்தவர்கள் கயிற்றை இழுத்து அவனை அருகே கொண்டுசென்றனர். ஆலமரத்தின் வேரென தொங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83849