Tag Archive: சுதீர் செந்தில்

சென்னை கவிதை வெளியீட்டுவிழா

சென்னையில் குமரகுருபரனின் கவிதைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக பத்தாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். காலை எழும்பூர் ரயில்நிலையத்தில் குமரகுருபரனே நண்பருடன் வந்திருந்தார். வழக்கமான பிரதாப் பிளாசா ஓட்டலில் அறை. கவிஞர் நரன் , ஆத்மார்த்தி ஆகியோரைச் சந்தித்தேன். நரன் வசந்தபாலனுக்கு அணுக்கமானவர். ஒரே ஊர்க்காரர் என அறிந்தேன். ஆத்மார்த்தியை முன்னரே ஒரு நூல்வெளியீட்டுவிழாவில் சந்தித்திருந்தேன். நண்பர் சுகா அறைக்கு வந்திருந்தார். நானும் அவரும் ஒரு படம்செய்வதாக இருக்கிறோம். மாலையில் கவிதைவெளியீட்டுநிகழ்ச்சி. பொதுவாக என் ‘எதிரிகள்’ என இணையத்தில் தென்படுபவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84691

உயிர் எழுத்து நூறாவது இதழ்

சுதீர் செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் உயிர் எழுத்து மாத இதழின் நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. வழக்கம்போல நேர்த்தியான வடிவமைப்புடன் அமைந்துள்ளது. இவ்விதழின் மையக்கரு எஸ்.வி.ராஜதுரைக்கும் உயிர் எழுத்துக்குமான உறவு. எஸ்.வி.ஆரின் அழகிய புகைப்படம் இதழின் அட்டையில் இடம்பெற்றிருக்கிறது. எஸ்.வி.ஆரும் உயிர் எழுத்தும் என்ற தலைப்பில் சுதீர் செந்தில் எழுதிய உணர்ச்சிமிகுந்த கட்டுரை அவருக்கும் இதழுக்குமான உறவை விவரிக்கிறது. எஸ்.வி.ஆர் இவ்விதழில் மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மாய யதார்த்தவாதத்தின் அரசியல்முகத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட மாயமும் மாந்த்ரீகமும், டிம்பக்டூ என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79351

மருதம்-சுதீர்செந்தில்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் அன்பர் முத்துகிருஷ்ணன் தங்களுக்கு எழுதிய கடிதத்தையும் அதற்குத் தாங்கள் எழுதிய பதிலையும் வாசித்தேன். அதில் அபாண்டமாக உண்மைகளை மறைத்தும் திரித்தும் பல விஷயங்களை நீங்கள் கூறியுள்ளீர்கள். அதுகுறித்து சில விஷயங்களை உங்களுக்கு விளக்கவும் நினைவூட்டவும் விரும்புகிறேன். அபாண்டம் 1: “எஸ்.வி.ராஜதுரை எனக்கு ‘பிரச்சினைகள்’ வந்திருக்கும் என ஊகிப்பதற்குக் காரணம் உண்டு. அவர் வழிநடத்தி வெளியாகும் ‘உயிர் எழுத்து’ மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28458