Tag Archive: சுதர்சனை

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70

பகுதி பத்து : பெருங்கொடை – 9 களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள் சுழன்று சென்றிருந்தது. பித்தளைத்தாழ் எவரோ வந்துசென்றதன் தடயம் என அசைந்துகொண்டிருந்தது. சொல்லி முடித்த உதடுபோல மெல்ல அமைந்தது சாளரத்திரை. அவள் பெருமூச்சுடன் எழுந்து சென்று உப்பரிகையை அடைந்து இருண்ட தோட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். இருளுக்குள் இலைகள் அசைவிழந்திருந்தன. பின்னர் மீண்டுமொரு காற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107021/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69

பகுதி பத்து : பெருங்கொடை – 8 கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன் குழலை நீவி தோளுக்குப் பின்னால் இட்டான். அவன் எழப்போகிறான் என சுப்ரியை எண்ணினாள். வெடித்துக் கூச்சலிட்டபடி வாளை உருவக்கூடும். அல்லது வெளியே செல்லக்கூடும். ஆனால் அந்த மெல்லிய அசைவுத்தோற்றம் மட்டும் அவனுடலில் ததும்பியதே ஒழிய அவன் எழவில்லை. துரியோதனன் மீண்டும் அமர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107001/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 11 குறுங்காட்டில் அவர்கள் ஏற்கெனவே வந்த தடம் யானைவழிபோல தெரிந்தது. அதன் வழியாக வருவது எளிதாக இருந்ததை கர்ணன் உணர்ந்தான். மிகத்தொலைவில் கங்கையின் மேல் சென்ற படகு ஒன்று எழுப்பிய கொம்போசை பிளிறலென கேட்டது. சுப்ரியை நினைவழிந்து புரவியின் மேல் ஒட்டியபடி கிடக்க அவளுடைய கைகள் இருபக்கமும் ஆடிக்கொண்டிருந்தன. கைகளில் அணிந்திருந்த சங்குச்செதுக்கு வளைகள் உடைந்து உதிர்ந்து அவற்றின் கூர் பட்ட இடம் புண்ணாகி குருதிவடுக்களாக தெரிந்தது. கூந்தல் புரிகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82940/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 10 ராஜபுரத்தின் அளவுக்கு பொருத்தமில்லாமல் மிகப்பெரிதாக இருந்தது அரண்மனை. கங்கை வழியாக கொண்டுவரப்பட்ட இமயச்சாரலின் தேவதாரு மரத்தடிகளை தூண்களென நாட்டி அவற்றின்மேல் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து குறுகிச் சென்று  பன்னிரு குவை மாடங்களாக மாறி கொடிகள் தாங்கி வான்நீலப் பகைப்புலத்தில் எழுந்து நின்றிருந்த ஏழடுக்கு மாளிகை லாடவடிவம் கொண்டிருந்தது. அதன் அணைப்புக்குள் இருந்த பெருமுற்றத்தில் மணத்தன்னேற்பு விழவுக்கு என போடப்பட்டிருந்த அணிப்பந்தல் காலை இளங்காற்றில் அலையிளகி கொந்தளித்தது. மாளிகையின் அனைத்து உப்பரிகைகளிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82925/