பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 6 சுரேசரிடம் பேசிவிட்டு மீண்ட பின்னரே சம்வகை நகருக்குள் வந்துகொண்டிருந்த மக்களை கூர்ந்து நோக்கத்தொடங்கினாள். ஏற்கெனவே பலவகையான மக்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். நகரிலிருந்து மக்கள் விலகிச்செல்கிறார்கள் என்னும் செய்தியே பலரை உள்ளே வரச்செய்ய போதுமானதாக இருந்தது. முன்பு வந்துகொண்டிருந்தவர்கள் இரவலரும் நாடோடிகளுமாக தெரிந்தனர். பின்னர் சிறுவணிகர்களும் கைவலரும் சூதர்களும் வரலாயினர். பின்னர் ஆயரும் உழவுக்குடியினரும்கூட தென்பட்டார்கள். அஸ்தினபுரியில் புதியவர்களுக்கு இடமிருக்கிறது என்னும் செய்தியை அந்நகரைவிட்டுச் சென்றவர்கள் பரப்பினர். அங்கே …
Tag Archive: சுதமன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/128167
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51
கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு முடியப்போவதுமில்லை என்ற உணர்வை அவர்கள் அடைந்தனர். எஞ்சியிருப்பது அத்தருணம் மட்டுமே. அதில் வெல்வது எவர் எனும் வினா. வென்ற பின் தொடர்வதென்ன என்பதை அவர்கள் அறியவியலாது. வெல்வது எதன் தொடர்ச்சி என்பதையும் அறியவியலாது. இருபுறமும் அறியமுடியாமைகளின் பெருவெளி அவர்களை இரு கைகளென அள்ளி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/122222