Tag Archive: சுட்டிகள்

அணையாவிளக்கு

சமீபத்தில் ஒரு சிறிய நண்பர் குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும் பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாதென்றும், ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே என்றும் சொன்னேன். உதாரணமாக எந்த ஊடகவியலாளரும் மதுரை தினகரன் அலுவலகத்தில் நிகழ்ந்த கொலையைப்பற்றி இன்று எழுதிவிடமுடியாது. அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31402

இணையச்சமநிலை- சரவணக் கார்த்திகேயன்

வலைச்சேவை நிறுவனங்கள் இலவசமாக எப்படி இந்தச் சேவைகளை நமக்கு அளிக்கின்றன? அது இலவசம் அல்ல, அது போல் தோன்றுகிறது. உதாரணமாய் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை நமக்கு இலவசமாக அளித்து விட்டு விளம்பரங்களை அதில் நுழைத்துப் பணம் பார்க்கிறது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கி விட்டு, அதே ஜிமெயில் சேவையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காசுக்குத் தருகிறது. இப்படி மறைமுகமாக நம்மிடமிருந்து காசு வலைச்சேவை நிறுவனங்களுக்குப் போய்க் கொண்டு தான் இருக்கிறது. நேரடியாக அவர்களுக்கு நாம் காசு கொடுப்பதில்லை என்பதால் இலவசப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75140

திருநீற்றின் ஆரம்பம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, இன்று திருநீறு அணிவது உடலின் நிலையாமையை தொடர்ந்து நினைவில் வைத்திருக்க உதவும் சாதனமாக தத்துவார்த்த அடிப்படையில் விளக்கப்படுகின்றது. தென்சூடானின் டிங்கா பழங்குடியினர் பற்றிய அருமையான படங்கள் இடம்பெற்றுள்ள இந்தக் கட்டுரை திருநீற்றின் ஆரம்பம் மனிதப்பயன்பாடு கருதியே உருவாகி இருக்கக்கூடும் என்பதை காட்டுகின்றது. http://tekey.net/b/en/dinka-nilotic-ethnic-from-sudan/ ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே’ என்று மாணிக்கவாசகர் கூறுவதையே திருநீறும் எடுத்துவந்திருக்கின்றது. சிவேந்திரன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/75072

காடு- கே.ஜே.அசோக் குமார்

கதையில் அவன் தோல்வியடைந்தவனாக சித்தரிக்கும்போது உண்மையில் அப்படி அவன் தோல்வியடைய முடியாது என்று தோன்றியது. இளமை எண்ணங்களை வைத்து அவன் முதுமையில் பிடிக்கும் இடத்தை ஒரு நேர்க்கோட்டால் இணைத்து சொல்லிவிட முடியவில்லை. காடு நாவல் பற்றி கே.ஜே.அசோக் குமார் அவரது இணையதளத்தில் எழுதியிருக்கும் கட்டுரை காடுபற்றிய அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/71104

ஒளிவிடும் கோவை

விண்ணில் நாநூறு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழகத்தின் சித்திரம். அதிலேயே தமிழகத்தில் உள்ள பணப்புழக்கம் தெரிகிறது. ஆச்சரியம்தான் விண்வெளியில் இருந்து தமிழகம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/71141

குகை ஓவியங்கள் -கடிதம்

http://solvanam.com/?p=37871 அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரை முக்கியமானதாக எனக்குப் படுகிறது. எல்லாம் பாரத தேசத்தில் இருந்தே துவங்கியது அல்லது அனைத்திற்கும் தாய் நிலம் தமிழகமே என்கிற முழக்கமும் , எல்லாம் ஐரோப்பா வில் இருந்தே துவங்கியது என்கிற சித்தாந்தமும் , இந்தியாவில் உள்ளது வெறும் பெருமிதஉணர்வே , இந்தியர்களின் இந்திய ஆராய்ச்சி biased and un- scientific என்கிற எதிர் நோக்கிற்கும் இடையே ஒரு வாசகன் உண்மையை அறிய கடும் உழைப்பை செலுத்த வேண்டி இருக்கிறது. இதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70686

அசுரர் இன்று

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66375

சு.ரா- குரல்

[embedyt]http://www.youtube.com/watch?v=TQCM9WhukhI[/embedyt] இனிய ஜெயம், என் இலக்கியத் தோழமை அனுப்பிய சுட்டி இது. நான் பொதுவாக யூ ட்யுப் சென்று எந்த எழுத்தாளர் பேட்டியும் பார்த்ததில்லை. அவர்கள் எழுத்தின் வழியே என் அகத்தில் உருவாகி வந்திருக்கும் பிம்பம் அப்படியே இருக்கட்டும் என்றொரு எண்ணம்தான். முன்பு ஒரு முறை ஜெயகாந்தன் அவர்களை கடலூர் ஞானியார் மடத்தில் ஒரு எளிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஒரு இருபது நண்பர்கள் மத்தியில் வைத்து முதன்முதலாக பார்த்தேன். சிறுமை தீண்டாதவன் எத்தகு ஆணவம் கொண்டிருப்பானோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66335

வெண்முரசு வாசகர் விவாத தளம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழா நடந்து முடிந்த பின்பு நான் உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதியிருந்தேன். விழா வீடியோ இருக்கிறதா என்று கேட்டு. அது இல்லை, தேவையில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆனால் இப்போது வெண்முரசு விழாவை வீடியோ பதிவுடன் மட்டுமில்லாமல் நேரடி ஒளிபரப்பு முயற்சி, தொலைகாட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு என்று பல படிகள் மேலே சென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஃபேஸ்புக் பக்கம், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் வாழ்த்து வீடியோக்கள் என்று தொழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66318

துணை இணையதளங்கள்

விஷ்ணுபுரம் இணையதளம் [விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு] வெண்முரசு விவாதங்கள் இணையதளம் கொற்றவை விவாதங்கள் இணையதளம் பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம் பனிமனிதன் இணையதளம் காடு இணையதளம் ஏழாம் உலகம் இணையதளம் அறம் இணையதளம் வெள்ளையானை இணையதளம் இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம் நண்பர்களால் நடத்தப்படுகிறது. விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63054

Older posts «