Tag Archive: சுகுமாரன்

விஷம் தடவிய வாள்

அம்மா இறந்த அந்நாட்களில்தான் சுகுமாரன் பற்றி எரிந்துகொண்டிருந்தார். [நெடுங்காலம் புகைந்துகொண்டிருப்பதைவிட பற்றி எரிவது மேல், ஒருகணம் எனினும்] நான் அவர் கவிதைகளுடன் இருந்த அந்தக்காலத்தில் அம்மாவும் நினைவும் சுகுமாரன் வரிகளும் ஒன்றென இணைந்துகொண்டன. அவருடைய உக்கிரமான காதல் கவிதைகளை நான் உறவின் பிரிவின் மரணத்தின் கவிதைகளாகவே வாசித்துக்கொண்டிருந்தேன். இன்று காலையில் இருந்தே அம்மாவின் நினைவு. நேற்று அம்மாவுக்குப் பிடித்த ஒரு பாடலில் இருந்து ஆரம்பித்து இப்போது வரை நீண்டது அவ்வுணர்வு. அதைத் துயரம் என்றோ உளச்சோர்வு என்றோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96934

பூனையும் புலியும்

  நேருக்கு நேர்  கே.வி.திருமலேஷ்   1 கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது என்னைப் பார்த்ததும் நின்றது. அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும் அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில் எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில். பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம், இருவருக்கும் பின்வாங்க மனமில்லை. சொல்லப்படாத யுத்தம் போல ஒன்று. எனக்குத் தெரிந்திருக்கவில்லை பூனையின் கண்கள் அவ்வளவு சலனமற்றவை.   2 அதன் வால் காற்றில் விடைத்திருக்க முடிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93420

கண்ணீருப்பின் கவிஞன்

சில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ். எழுபதுகள் உலகவரலாற்றின் சோர்வுக் காலகட்டம். உலகமெங்கும் புரட்சி இயக்கங்கள் தோன்றி தோல்வியடைந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்தது. புதுயுகம் பிறப்பது குறித்த நம்பிக்கைகள் பொய்த்தன. அந்த விரக்தியின் சினத்தின் ஊடாடும் நம்பிக்கையின் குரல்கள் இவர்கள். இன்று வரை இவர்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93394

அடுத்தகட்ட வாசிப்பு

உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கியக் கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையைக் குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25670

மலைச்சாரலில்…

இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று சொல்லவேண்டும். கமலுடனும் அவருக்கு நெல்லை வட்டார வழக்கு சொல்லிக்கொடுக்க வந்திருந்த நண்பர் சுகாவுடனும் பேசி அவர்களுடைய அற்புதமானநகைச்சுவைக்காகச் சிரித்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். நடுவே மதன் கார்க்கி சுகாவை கூப்பிட்டு ஒரு பாடலுக்காக நெல்லையின் சிறப்புச் சொற்களைக் கேட்டார். அவற்றை பாட்டில் சேர்க்கமுடியாது என்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61084

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50

பகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45576

பிரிவின் விஷம்

”வாழ்க்கையை வகுத்துச்சொல்லச் சொன்னால் நான் இப்படிச் சொல்வேன். உறவும் பிரிவும். அவ்வளவுதான்”என்றார் மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு முழுப்போதையில். பயங்கரமான ஒரு ஏப்பம். இமைகளை முழுமூச்சாக உந்தி மேலே தூக்கி சிவந்த விழிகளால் என்னைப்பார்த்து ”..ஆனால் என்ன விஷயம் என்றால் பிரிவுக்கு உறவை விட நூறுமடங்கு எடை அதிகம்”. ஒருநிமிடநேரம் தூங்கியபிறகு கண்ணைத்திறந்து, சட்டைப்பையை மார்பெங்கும் தேடிக் கண்டுபிடித்து, மொத்தக்கையையும் உள்ளே விட்டுத் துழாவி, கசங்கி முதுமை எய்திவிட்டிருந்த சிகரெட்டை எடுத்து, வாய்க்காகத் தேடியபடி ”தீப்பெட்டியை எடுடா மயிரே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/774

வெளியின் ஆடை

மனம் – தறி வாக்கு – இழை பூமிக்கான ஆடையை நெய்துகொண்டிருக்கிறார் கபீர் நெய்யும் துணியின் மறுமுனை எங்கே முடிகிறது? நதிபோல் கடலிலா? வானம்போல் வெளியிலா? என் ஆரம்பிக்கும் சுகுமாரனின் கவிதை சமீபத்தில் நிகழ்ந்த ஓர் அபூர்வ மன எழுச்சி . சச்சிதானந்தனின் சாயல்கொண்ட அவரது பழைய பாணிக்கவிதைகளை நினைவூட்டுகிறது. கவிதையின் தலைப்புகூட.ஆனால் சச்சி ஒருபோதும் இக்கவிதை தொடும் முடிவிலியை தொட்டறிய முடிந்ததில்லை. கவிதை என்பது பாணியில் உருவத்தில் நடையில் இல்லை. கவிஞன் என்ற ஆளுமையில், கவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22537

யுவன் வாசிப்பரங்கு

கன்னியாகுமரி அருகே கல்லுவிளையில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அக்டோபர் 7,8,9 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மீதான வாசிப்பரங்கு நடைபெற்றது. பொதுவாக நவீன கவிதை பற்றிய அரங்குகள் எல்லாமே கவிதை எழுதுபவர்கள் மட்டுமே பங்குகொள்பவையாகவே நடப்பது வழக்கம். கவிதைவாசகர்களைக் கவிஞர்கள் சந்திப்பது அபூர்வம். இது அத்தகைய தருணங்களில் ஒன்றாக இருந்தது. நவீன தமிழ்க்கவிதை கவிஞர்களாலான சிறியவட்டத்துக்குள் தனக்குமட்டுமே என ஒரு சொற்களனை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அங்கேகவிதைகளுக்குப் பின்புலமாக ஒரு அறிவுத்தளம் உள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21811

கவிஞனின் கட்டுரைகள்

சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், ”தமிழில் பெரும்பாலான கவிஞர்களுக்கு உரைநடை எழுதத்தெரியாது. இது எபப்டி இருக்கிரதென்றால் நடனமாட முடியும், நடக்கத்தெரியாது என்பது போல” ஆனால் கவிஞர்களில் சிலரே நல்ல உரைநடை எழுத முடியும் என்பதே உண்மை. ஏனென்றால் கவிதை மொழிமின்னல்களாக மனதில் உருக்கொள்கிறது. நல்ல கவிதை எதுவுமே மொழித்துணுக்குகளாகவே இருக்கிறது. நல்ல உரைநடை என்பது அதன் ஓட்டத்தினாலேயே அடையாளப்படுத்தப்படுவதாகும். ஓட்டம் என்பது எதன் மூலம் உருவாகிறது? மொழியின் வழியாக ஓர் அகத்தருக்கம் செயல்படும்போதே ஓட்டம் பிறக்கிறது. சிலந்திபோல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2425

Older posts «