Tag Archive: சுகா

பாபநாசம்

பாபநாசம் நேற்றே இங்கு அமெரிக்காவில் வெளியாகிவிடும். அதைப்பற்றி ஒரு பதைப்பு எனக்கு இருந்தபடியே இருந்தது. ஆகவே அதைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து நோக்கவில்லை. நேற்று மாலை நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி முடித்து விருந்தும் உரையாடல்களும் கடந்து நள்ளிரவில் நண்பர் அரவிந்தன் கன்னையன் அவர்களின்வீடு திரும்பியபின்புதான் இணையத்தில் எதிர்வினைகளைப் பார்த்தேன். கமலுக்கும் சுகாவுக்கும் ஜித்துவுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு நிறைவுடன் தூங்கப்போனேன். காலையில் பெட்டிநிறைய மின்னஞ்சல்கள். இந்தத்தளத்தில் நான் எழுதும் திரைப்படங்களைச் சார்ந்து அதிகமாகப் பேசவேண்டாம் என எண்ணம் கொண்டிருப்பதனால் விமர்சனங்களையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76598

வெண்முரசு வாழ்த்து- சுகா

[embedyt]http://www.youtube.com/watch?v=hIkPfEEl_2M[/embedyt] என் நண்பரும் இயக்குநரும் எழுத்தாளருமான சுகா அளித்த வாழ்த்து [EPSB] [/EPSB]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64741

பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

பாபனாசம் படப்பிடிப்பு நேற்று [26-10-2014] முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம். சினிமாப்படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஓர் அரசு அலுவலகத்துடனோ வணிகநிறுவனத்துடனோ அதை ஒப்பிட்டால் அந்த வேறுபாடு திகைக்கவைக்கும். சினிமாவில் டீ பரிமாறுபவர் முதல் அனைவருமே சினிமா மேல் பெருங்காதலுடன் இருப்பவர்கள். சினிமாவை கவனித்துக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64127

ஆசான்களின் ஆசான் -சுகா

ஒரே ஊர்க்காரர்கள் ஒத்தசிந்தனையுடைவர்களாகத்தான் இருப்பார்களோ என்று நான் சந்தோஷமாகச் சந்தேகிக்கும் வண்ணம், என் மனதில் ஜெயகாந்தனைப் பற்றி ரகசியமாக நான் ஒளித்து வைத்திருக்கும் வார்த்தைகளை, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த, பி.ஏ.கிருஷ்ணனின் குரலில் கேட்டேன். ‘இன்னைக்கு இருக்கிற அளவுகோல்கள வச்சு நாம ஜெயகாந்தன மதிப்பிடக் கூடாது. இன்னும் சொல்லப் போனா நாம அவர மதிப்பிடவே கூடாது. ஏன்னா, நமக்கு அவர் ஆசான்லா’. http://venuvanamsuka.blogspot.in/2014/05/blog-post.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/58112

நயினார்

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன். யானை பற்றிய எந்தச் சித்தரிப்பையும் நான் விரும்புவேன். நண்பர் சுகா சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை சமீபத்தில் வாசித்த அழகிய சித்தரிப்பு.

Permanent link to this article: https://www.jeyamohan.in/25356

சென்னை, மூன்று சந்திப்புகள்

சென்னைக்கு செல்வதற்கு மிகவும் பொருத்தமான ரயில் கன்யாகுமரி எக்ஸ்பிரஸ். ஆனால் அதில் எல்லா இடங்களும் பிப்ரவரி முதல்வாரம் வரை முன்பதிவுசெய்யபட்டிருந்தன. எல்லா ரயில் இருக்கைகளும், படுக்கைகளும், சொகுசுப் பேருந்துகளில் சாய்விருக்கைகளும், அரசுப்பேருந்துகளின் குத்திருக்கைகளும் எல்லாமே நிறைவு. ‘அதுவும்பூரணம் இதுவும் பூரணம்’. ஏராளமானவர்கள் பதிவை ரத்துசெய்துகொண்டும் இருந்தார்கள். ஆனால் ‘பூரணத்தில் இருந்து பூரணம் விலகியபின்னரும் பூரணமே எஞ்சியிருந்தது’ ஆனால் தேடிக்கொண்டேபோன பயணநிறுவனப் பெண் அலறினார் ”சார், பதினஞ்சிலே ஏஸி சீட் இருக்கு” ”போடு” என்று கூவினேன். கையை வைப்பதற்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6313