Tag Archive: சுஃப்ரை

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 5 துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு வெள்ளித்தேர்கள். நூறு வெண்கலப் பேழைகளில் அடுக்கப்பட்ட நீலப்பளிங்குப் புட்டிகளில் யவனர் மட்டுமே வடிக்கத் தெரிந்த நன்மதுத்தேறல். அந்த மதுவளவுக்கே மதிப்புள்ளவை அந்தப்புட்டிகள். நூறு மரப்பேழைகளில் பீதர்நாட்டு பட்டுத்துணிகள். சோனகர்களின் மலர்மணச்சாறு நிரப்பப்பட்டு உருக்கி மூடப்பட்ட பித்தளைச் சிமிழ்கள் கொண்ட பன்னிரு பேழைகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78233

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 1 திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சு மாளிகையிலிருந்து வெளிவந்து தேர்நிலையை அடைந்து அந்த முற்றமெங்கும் பரவி நின்றிருந்த நூற்றுக்கணக்கான புரவிகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் நோக்கியபடி எதையும் உணரா விழிகளுடன் இடையில் கைவைத்து சற்றுநேரம் நின்றான். ஏனிங்கு நிற்கிறோம் என்ற எண்ணம் முதலிலும் எதையோ எண்ணிக்கொண்டிருந்தோமே என்ற வியப்பு பின்னரும் எழுந்த உடனே தீயின் தொடுகை போல அந்நினைவு எழுந்தது. துடித்து எழுந்த உடலுடன் தன் தேரை நோக்கிச் சென்று அதில் ஏறி அமர்ந்து பாகனிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77787

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 7 துவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன் புன்னகையுடன் இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி மாலையின் மக்கள் பெருக்கு சென்று கொண்டிருந்த தெருவின் ஓரத்திற்கு வந்து கைகளும் புயங்களும் முட்டிச்செல்ல அசைந்தபடி நின்றான். திருஷ்டத்யும்னன் அருகே வந்ததும் “தாங்கள் இத்தனை விரைவில் திரும்புவீர்கள் என்று எண்ணவில்லை இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “அப்படியானால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76942

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 4

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 4 அஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான். அவன் பணிந்து “வணங்குகிறேன் இளவரசே. தங்கள் வருகையால் அரண்மனை மகிழ்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்துவிட்டு தேரை முன்செல்லப்பணித்ததும் ஓர் எண்ணம் தோன்றி திரும்பிப்பார்த்தான். அங்கே காவல்கோட்டத்தில் நின்றிருந்த அத்தனை காவலர்களும் இளைஞர்கள். உடனே அதுவரை அவன் கடந்துவந்த ஏழு காவல்கோட்டங்களும் நினைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75527

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 3

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 3 கதவுக்கு அப்பால் மெல்லிய சிலம்பொலி கேட்டு திருஷ்டத்யும்னன் மஞ்சத்தில் இருந்து எழுந்து நின்றான். பின்னர் அப்படி எழுந்ததை நாணியவன் போல பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டு இருண்ட சாளரத்துக்கு அப்பால் இருளென அசைந்த மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான். காற்று சிறிய சலசலப்புடன் கடந்துசென்றது. சாளரத்திரைச்சீலை ஓர் எண்ணம் வந்து மறைந்ததுபோல எழுந்து மீண்டும் படிந்தது. சுடர் சற்றே அசைந்து அமைந்தது. கதவு சிறிது திறந்து சயனன் எட்டிப்பார்த்து “வணங்குகிறேன் இளவரசே” என்றான். அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75451