Tag Archive: சீர்மை

நோயும் சீர்மையும்-கடிதம்

அன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த அனுபவங்கள் மிகவும் கொடியவை. என்னை spiritually demoralize செய்த அனுபவங்கள் அவையெல்லாம். என்னால் மாதக்கணக்கிலே சரியாகத் தூங்கமுடிந்ததே கிடையாது. ரொம்பநாட்களுக்குப்பிறகு கூட அடிக்கடி கனவுகள் கண்டு முழித்துக்கொள்ளுவேன். நான் ஒரு சரியான cynic ஆக மாறிவிட்டேன். எதிலுமே ஒரு skeptic பார்வை வந்துவிட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41305

இலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…

(தனிப்பட்ட குறிப்புகள் நீக்கப்படுள்ளன – தளநிர்வாகி) சமீபத்தில் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற சினிமா வெளிவந்தபோது அது ஜியோங் ரோங் எழுதி சி.மோகன் மொழியாக்கத்தில் வெளிவந்த ஓநாய்குலச்சின்னம்’ என்ற நாவலின் தழுவல்தான். என்று ஒருவர் படத்துடன் சேதிவெளியிட்டிருந்தார். அதை ஒருவர் எனக்குச் சுட்டி அளித்து சரிதானா என்று கேட்டிருந்தார். இரண்டுக்கும் பொதுவாக உள்ள ஒரே விஷயம் ஓநாய் என்ற வார்த்தைதான். இந்தமனநிலையைத்தான் நாம் முதலில் கவனிக்கவேண்டும்.நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள் சுயமான படைப்பூக்கம் அற்றவர்கள். அவர்களின் தொழிலில் ஒரு இரண்டுபக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41422

சிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்

அன்புள்ள ஜெ, சீர்மை குறுநாவலை இரண்டுமுறை வாசித்தேன். மீண்டும் Grace and Grit ஐ வாசித்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று A theory of everything வாசித்தேன். கடந்த நான்குநாட்களாக இந்தக்குறுநாவலிலேயேதான் உட்கார்ந்திருக்கிறேன். எல்லாவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ். அரவிந்த் இரண்டு உலகங்களை பக்கம்பக்கமாக வைத்துப்பார்க்கிறார். ஒன்று உணர்ச்சிகளின் உலகம். அது அப்படியே நேரடியாக வாழ்க்கையின் அனுபவங்களுடன் இணைந்திருக்கிறது. அதிலே துக்கமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான் காணப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொல்வோமென்றால் அதில் உள்ளது ஒரு குறையுணர்ச்சி மட்டும்தான்.நோய், மரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41314

சீர்மை- யின் யாங்-கடிதம்

ஜெ, சீர்மை குறுநாவலை வாசித்து முடித்ததும் இதை எழுதுகிறேன். ஆசிரியரே சொல்வதுபோல இது யின் – யாங் கின் கதை . சிந்தனைகள் X உணர்ச்சிகள் நோய் X ஆரோக்கியம் என்று அவர் அந்த கறுப்புவெள்ளைக் கட்டங்களை போட்டுக்கொண்டே செல்கிறார். அதில் முக்கியமானது ஆண் X பெண் என்ற யின் – யாங் தான். கென்னும் த்ரேயாவும் ஒரேசமயம் முழுமையை நோக்கிச் செல்லுவதாக கதை சொல்கிறது நான் இரண்டுமூன்று புள்ளிகளை வைத்து இந்தக் குறுநாவலைத் தொகுத்துக்குக்கொண்டேன். த்ரேயா நோயின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41319

சீர்மை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ ‘சீர்மை’ இது எழுத வேண்டுமே என்று யோசித்து, வாசிப்பு அனுபவத்தை திரட்டி, உருவாக்கிய எழுத்தாக தெரியவில்லை.. உங்களை குறித்து சொல்வதை போல் , இது பீறிட்டு வந்த எழுத்து. எழுத்தாளனை மீறி நிகழ்ந்த ஒன்று… சீர்மையை குறித்து பேசும் இந்த நாவலை நாம் கச்சிதம் என்று பேசலாம்.. வடிவ நேர்த்தி, அளவு, கதை கூறல், சம்பவங்கள் அல்லது தகவல்கள் என அனைத்தும் கச்சிதம். நாவல் எவ்வளவோ சொல்கிறது, ஆனால் எல்லாமே கச்சிதமாய் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41241

சீர்மை -மதிப்பீடுகள்

grace and grit படிக்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்த கேள்வி இப்படியொரு வாழ்வு பூமியில் மீது மனிதரால் வாழ முடியுமா என்பதுதான் இப்படியொரு காதல் இப்படியொரு தீவிரம் இவ்வளவு சந்தோசம் இவ்வளவு துக்கம் இவ்வளவு அமைதி இது வெறும் புனைவாய் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வேன் குறிப்பாக நீங்கள் நன்றாகவே விவரித்திருக்கும் அவர்கள் இருவருக்கும் இடையேயான சலிப்பும் ஆங்காரமும் வெறுப்பும் உடைந்து மீண்டும் அன்பு பூக்கும் இடம். நான் என் வாழ்வின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41208

சீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்

அன்புள்ள அரவிந்த் சீர்மை குறுநாவலை இப்போதுதான் படித்து முடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிக அற்புதமான அனுபவத்தைத் தந்திருக்கிறீர்கள். நேற்றிரவு, நெடிய நாளின் சலிப்பையும் பாரங்களையும் இலகுவாக்கிக்கொள்ளும் சாத்தியங்களைக் கைவிடுத்து கென்னின் வாழ்வினுக்குள் எட்டிப்பார்க்கத் தலைப்பட்டேன். தாம் பெற்ற புத்தம் உத்வேகத்தைத் தம்மில் அழித்துக்கொள்ளுமளவு ஒட்டடை படரும் வாழ்வே பலருக்குக் கைவரப்பெற்றது. கென்னின் வாழ்வும் அப்படிப்பட்ட திசையில் செல்லும்போது த்ரேயா வழி அவரது பிரக்ஞையில் வேறேதோ திறப்பை நிகழ்த்திவிட்டது. உறைபனிப்பருவ மனிதன் உருவாக்கிய லாஸ்கோ குகைஓவியங்களின் கச்சிதமான சீர்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41206

’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்

ஜெ, தமிழிலக்கியத்தில் தலைமுறைக்கு ஒருவரோ இருவரோ ஜீனியஸ்கள் வருகிறார்கள். அவர்கள் வரும்போதே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அறிமுகமாகும்போதே நிறைய தாண்டிவந்திருக்கிறார்கள் என்று தெரியும் என்று நினைக்கிறேன். அவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகத்தான் தெரியவருவார்கள். அப்படி ஓர் அறிமுகம் அரவிந்த். சீர்மை தமிழில் இந்த நூறுவருடத்தில் எழுதப்பட்ட அற்புதமான பத்துப்பதினைந்து கதைகளில் ஒன்று. அறிமுக எழுத்தாளர் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை முதல் பகுதிதான் வந்திருக்கிறது. முழுசாக படிக்கவுமில்லை. என்றாலும் உடனடியாக எழுதவேணுமென்று தோன்றியது. ஒரு மகத்தான அறிமுகம் சிவராம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41202

‘சீர்மை ஒரு கிளாஸிக்’ – கடிதங்கள்

ஜெ, புதியவர்களின் கதைகள் என்ற வரிசையில் இந்த தளத்தில் நீங்கள் வெளியிட்ட கதைகளிலேயே கிளாஸிக் என்பது சீர்மைதான். அறிமுக எழுத்தாளர் என்றால் ஒரு பெரும்படைப்பாளியின் அறிமுகம் என்று தயங்காமல் சொல்வேன். தமிழின் எந்த ஒரு பெரும்படைப்பாளிக்கும் நிகரான நடை, கூர்மையான கதைகூறும் முறை. அடுத்தடுத்த பகுதிகளை எதிர்பார்க்கிறேன். யாருடைய கதை என்ன என்று தெரிந்து இன்னும் மன எழுச்சியை உருவாக்குகிறது சண்முகம் ஜெயமோகன், சீர்மையைப் படித்து வியந்துகொண்டே இருக்கிறேன். திரும்பத்திரும்ப வாசிக்கின்றேன். என்ன ஒரு நேர்த்தியான அற்புத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41196