Tag Archive: சீனா

ஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை?

என்னுடைய குறுகிய வரலாற்று அறிவில், நான் நம்முடைய வரலாற்று ஆவணங்களைப்பற்றி கேள்விப்படுவதெல்லாம், ஓலைச்சுவடிகளைப்பற்றியும், கல்வெட்டுக்களைப்பற்றியும் தான். காகிதம், தோல், துணி இவற்றால் ஆன சுருள்களோ, புத்தக வடிவங்களோ உபயோகத்தில் இல்லையா அல்லது நமக்கு கிடைக்கப் பெறவில்லையா? நாலாம் நூற்றாண்டுக்குள் சீனாவில் காகிதம் பரவலாக உபயோகத்தில் வந்து விட்டதாக அறிகிறோம். சீனாவுடன் வணிக பரிமாற்றம் இருந்தது. அப்படியானால், காகித உபயோகம் தமிழ் நாட்டில் எப்பொழுது வந்தது? உங்களுக்கு சரித்திர ஆர்வமும் அறிவும் உண்டு என்பதை அறிவேன். விளக்கம் தந்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73571

குருதியாறு

ஜெ, விஷ்ணுபுரம் வாசித்த போது எனக்கு பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது அங்கே ஓடிய சோனா என்கிற சிவந்த நிறமான ஆறுதான். அதை விதவிதமாக வர்ணித்திருப்பீர்கள். ரத்த ஆறு, தீயால் ஆன ஆறு என்றெல்லாம். அதன் அருகே உள்ள மரங்களின் இலைகளில் அடிப்பக்கம் சிவந்த நிற ஒளி அலையடிக்கும் என்ற வர்ணனை அதை அப்படியே கனவுமாதிரி கண்ணில் நிறுத்தியிருக்கிறது அந்த நாவலில் எல்லாவற்றுக்கும் ‘அர்த்தம்’ உண்டு. சோனாவும் ஹரிததுங்கா என்ற குன்றும் மட்டும்தான் அர்த்தமே இல்லாதவை. அவை பாட்டுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69986

பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வரலாறு] ஆசிரியர்: ஜெயந்தி சங்கர் உயிர்மை பதிப்பகம். விலை120 பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள காரணங்கள் சிலவற்றை முன்வைப்பார்கள். ஐரோப்பாவில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் கிறித்தவ தேவாலயத்தின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. அரேபியாவில் இஸ்லாமின் பங்கு இன்றும் அழுத்தமாகவே தொடர்கிறது. இந்தியாவில் மனுநீதி போன்ற மதநீதிநூல்கள் சுட்டப்படுகின்றன. ஆனால் உலகவரலாற்றை எடுத்துப்பார்த்தால் எங்கும் பெண்மீதான அடக்குமுறை ஒரே மாதிரியாகத்தான் இருந்துவந்துள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90

சீனா – ஒரு கடிதம்

அன்புள்ள  ஜெ சார், நலமா? இப்போது சில நாட்களுக்கு முன் சீனா நமது எல்லையில் ஊடுருவி கூடாரம் அமைத்தும் அதற்கு இந்திய அமைச்சர்கள், இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகள் இந்தப் பிரச்னை பேசி தீர்க்கப்படும் என்கிறார்கள், அவர்கள் தரப்பும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே துருப்புகளை மெதுவாக உள்ளே செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியத் தரப்பு ராணுவ நடவடிக்கை எடுக்காமல், பேச்சுவாரத்தை நடத்துவது நம் அரசின் தொடை நடுங்கித்தனமாக, நம்மை ஒரு வாழைப்பழ தேச குடிமகன்களாக நினைக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36525

கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, சென்ற வாரம் தொழில் நிமித்தம் சீனா சென்றிருந்தேன். குறிப்பாக ஷாங்காய் மற்றும் பீஜிங் நகரங்கள். எனக்கு சாதாரணமாகவே சீனாவின் கட்டுப்பாடு மிக பிடிக்கும். ஒரு பத்து பதினைந்து வருடங்களில் இரு நகரங்களை இப்படி மாற்ற முடியும் என்பதற்கு இவ்விரு நகரங்களும் ஒரு எடுத்துக்காட்டு. நகர அமைப்பு அதற்கான உள்கட்டமைப்புகள் சாலைகளின் மேன்மை வாகன நடமாட்டத்தில் ஒரு கட்டுப்பாடு ,பொது இடங்களில் மக்கள் நடத்தையில் ஒரு ஒழுக்கம். ஆனால் சாதாரண மக்கள் சீன கலாச்சாரத்திலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21398

மாவோயிச வன்முறை 4

சில பொதுப்புத்திக் கேள்விகள் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும்பொருட்டு தினம் ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது. அந்த மக்களின் பிற்பட்ட நிலை, அங்குள்ள பண்ணையார்களின் சுரண்டல், அந்த மக்களின் நிலங்களை வேதாந்தா போன்ற நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுவது. …இன்ன பிற காரணங்கள். அக்காரணங்கள் அனைத்துமே உண்மையானவை என்ற நிலையில் இருந்தே நான் பேச ஆரம்பிக்கிறேன். அக்காரணங்களுக்கு எதிராக அம்மக்கள் போராடுவதன் அவசியத்தை ஏற்கிறேன். ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் அந்த மக்கள் வன்முறை அரசியலுக்கு தள்ளப்படுவதை நியாயப்படுத்துகின்றனவா என்பதே என் வினா. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10782

சீன அங்காடித்தெரு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், சீன அங்காடித் தெரு குறித்து எனது இணைப்பை வெளியிட்டிருந்தீர்கள். அதற்கு ஒரு வாசகர் ஏன் இந்தியாவில் எலிக்கறி தின்பதில்லையா என்று கேட்டிருந்தார். இது போன்று என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் மட்டையடியாக வரும் பதில்களைப் படிக்கும் பொழுது சலிப்பாக இருக்கிறது. சீனாவில் அடிமைகளாக மக்கள் சித்திரவதைச் செய்வதைச் சொல்லும் பொழுது அப்படி இந்தியாவில் கொத்தடிமைகளோ, வறுமையோ, சித்ரவதைகளோ இல்லை என்று யாரும் சொல்லவில்லை. இந்தியாவிலும் அந்தக் கொடுமைகள் இருக்கின்றன, இருந்தாலும் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7270

சீன அங்காடித்தெரு

உலகுக்கெல்லாம் லாப்டாப்பும், ஐஃபோனும் செய்து தரும் ஃபாக்ஸ்காம் என்ற சீன நிறுவனத்தின் ஊழியர்கள் அடிமைக் கொடுமை தாங்காமல் வரிசையாக மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ் நாட்டு ஜவுளிக் கடையில் நடப்பதை வெளியில் சொல்ல ஒரு அங்காடித் தெரு எடுக்கவாவது நமக்கு உரிமை இருக்கிறது ஆனால் தொழிலாளர்களின் சொர்க்க பூமியான சீனாவிலோ அதற்கும் வழியில்லை. இதெல்லாம் நம் காம்ரேடுகள் படிக்கிறார்களா? http://www.usatoday.com/money/world/2010-05-26-foxconnsuicides_N.htm அன்புடன் ராஜன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7265