Tag Archive: சி.மோகன்

மொழியை பெயர்த்தல்

கான்ஸ்டென்ஸ் கார்னெட் ‘தமிழில்’ பேயோன் க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன் ‘ஆமா! ஆமா!’ என்று சொல்லிக்கொண்டேன். [தமிழில்… பேயோன் ] ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதியின் தமிழாக்கம் இந்நூல். இதை மொழியாக்கம் செய்த க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். கல்லும் மண்ணும் என்னும் நாவலையும் கதைகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117158

சி.மோகனுக்கு விளக்கு விருது

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நூல்தொகுப்பாளரும்,கலை, இலக்கிய விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டுக்கால விளக்கு விருது அளிக்கப்படுகிறது. சி.மோகன் அதிக முனைப்பின்றிச் செயல்படும் இயல்பு கொண்டவர். ஆகவே குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் தமிழிலக்கியப்பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர். குறிப்பிடும்படியான சிறுகதைகளையும் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்னும் சிறியநாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ தமிழ் மொழியாக்கங்களில் ஓர் அலையை உருவாக்கியபடைப்பு சி.மோகனுக்கு வாழ்த்துக்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/78842

கனடா இலக்கியத்தோட்ட விருதுகள்

2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.தாராபுரம் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57400