Tag Archive: சி.சு. செல்லப்பா

வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு

ஜெ, சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன? அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா? ராஜாராம் [எம் ஏ நுஃமான்] அன்புள்ள ராஜாராம், எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80088

இலக்கியவாதிகளும் அமைப்புகளும்

ஜெ என் நண்பருடன் ஒரு இலக்கிய அரட்டையில் ஒருவிஷயம் பேச்சுவந்தது. அதை உங்களிடம் எழுதிக்கேட்காமல் இருக்கமுடியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய பேச்சு வந்தபோது வந்தது இது என்பதையும் சொல்லவேண்டும். அதாவது முன்பிருந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் , க.நா.சுப்ரமணியம் போன்றவர்களெல்லாம் தனியர்களாக நின்று போராடினார்கள் என்றும் இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் அமைப்புகளை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் இதெல்லாம் ஒரு வீழ்ச்சி என்றும் நண்பன் சொன்னான். ஓர் இளம்கவிஞர் எங்கோ எழுதியதை அவன் சுட்டிக்காட்டினான். இப்படிச் சொல்வது உண்மையா? இதை வீழ்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79381

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

வாடிவாசல் பற்றி

அன்புள்ள ஜெயமோகன் , சுந்தர ராமசாமி சி.சு.செல்லப்பா பற்றிய தன்னுடைய “நினைவோடை ” கட்டுரையில் எவ்வாறு சி.சு .செல்லப்பா “பொருட்சிக்கனம்” கொண்டு எழுத்து இதழை நடத்தினார் என்று சொல்லி இருந்தார் . வாடிவாசல் படித்த பிறகு சி.சு.செல்லப்பாவின் “எழுத்து சிக்கனமும் ” தெளிவாகியது .எண்பது பக்க படைப்பில் சி.சு செல்லப்பா தமிழ் இலக்கியத்தில் ஒரு அற்புதம் நிகழ்த்தியுள்ளார் . மேலும் ஜல்லிகட்டை என் கண் முன் நிறுத்திய படைப்பும் இதுவே . “சல்லி” கட்டை பற்றிய அருமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39816

எஞ்சும் இருள்

சுந்தர ராமசாமியின் தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலின் ஆரம்பகாலப் பிரதியை வாசிக்க நேர்ந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த சிறிய நூலில் அட்டையில் செல்லப்பாவே எடுத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் அழகிய புகைப்படம் இருந்தது. துள்ளிக்குதிக்கும் கருப்புக்காளை அந்தரத்தில் மாலைசுழல நிற்க அதை பிடித்து ஒருவர் தொங்கிக்கொண்டிருக்கும் உத்வேகமான தருணம் அது. காலத்தில் கல்லாக ஆகிவிட்டது அந்தக் கணம் செல்லப்பா ஒரு புகைப்பட நிபுணர். ஐம்பதுகளிலேயே அவர் நல்ல ஒளிப்பதிவுக்கருவி வைத்திருந்தார். மூர்மார்க்கெட்டில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29848

தமிழில் இலக்கிய விமர்சனம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழில் இன்று இலக்கியத் திறனாய்வு என்பது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது? அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா? தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார்? யாருடைய திறனாய்வையாவது வாசிக்க சிபாரிசு செய்ய இயலுமா? ராம்குமார் சாத்தூரப்பன் அன்புள்ள ராம்குமார் தமிழில் தொன்மையான திறனாய்வு முறைமை ஒன்று இருந்துள்ளது. நூல்களை சபை நடுவே அரங்கேர்றம்செய்யும் முறை இருந்தது, அது ஒரு திறனாய்வுமேடையே. அந்தத் திறனாய்வுகள் பதிவாகவில்லை நம்முடைய உரைகளைத் திறனாய்வு முறைகளில் ஒன்றாகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20586

வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்

1. எழுச்சிகளைப் பின் தொடர்ந்தவர் இலக்கியம் கற்பனாவாதம் நோக்கி நகரும்போது இலக்கிய விமரிசனம் அதன் பேசுபொருளைத்தன் அளவுகோலாகக் கொள்கிறது; செவ்வியல் தன்மை கொள்ளும்போது இலக்கிய விமரிசனம் வடிவ இலக்கணமாக மாற்றம் கொள்கிறது. பொதுமைப்படுத்தும் வரியாக இது இருக்கக் கூடும். ஆனால் இதன் மூலம் இலக்கிய விமரிசனத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவை வரையறை செய்துகொள்ள நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. தமிழின் நெடுங்காலச் செவ்வியல் பாரம்பரியத்தில் நமக்கு இன்றைய அளவுகோலின்படி இலக்கிய விமரிசனம் என்பதே இருக்கவில்லை. இலக்கணமே இருந்தது. அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9546