Tag Archive: சிவேந்திரன்

பயணம் பற்றி

அன்புள்ள சிவேந்திரன், உணர்ச்சிக் கொந்தளிப்பான ஈழக்கதைகளை வாசித்துப்பழகிய மனதுக்கு இந்த கதையில் உள்ள எளிமையும் அடக்கமும் ஆச்சரியமளிக்கின்றன. நேரடியான ஒரு சித்தரிப்பு வழியாக ஒரு காலகட்ட மாற்றத்தையே சொல்லிவிட முடிந்திருக்கிறது உங்களால். பெரும் அரசியல் போராட்டம், துக்கங்கள், இடப்பெயர்தல்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக சமூக ஆழ்மனதில் என்ன நகர்வை உருவாக்கியிருக்கின்றன என்று தேடிச்செல்லும் பார்வை முக்கியமானது. மிக மெல்லிய ஒரு திசைமாற்றம் மட்டும்தானா அது என்ற எண்ணத்தை உருவாக்கும் கதை மனிதவாழ்க்கையை, சமூகவாழ்க்கையைப்பற்றி பலகோணங்களில் சிந்திக்கச்செய்கிறது. இளைஞர்களின் உலகைப்பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38428

புதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்

“உலகம் சுத்திக்காட்டிற இந்த பஸ்ஸில ஏறாத எண்டு சொல்லச்சொல்ல கேட்காமல் ஏறிப்போட்டாய்.இண்டைக்கு ரெண்டு மணித்தியாலம் சரி.” பின் இருக்கையில் கதவடி மூலையில் இருந்த அந்தோனிப்பிள்ளை நினைவுகள் கலையமேற்கிலிருந்து சுள்ளெண்டு அடிக்கும் சூரியனை தடுக்க கையில் வைத்திருந்த பேப்பரை சிறிது பதித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.இரண்டு பெடியன்கள்.கைகளில் கொப்பிகளைப் பிடித்தவாறுநின்றிருந்தார்கள்.வெள்ளவத்தை மொட் ஸ்டடி சென்டர் தரிப்பிடத்தில் ஏறியிருக்கவேண்டும். யோசனையில் கவனிக்கவில்லை. “அடேய் நான் 102 இல கொச்சிக்கடையில இருந்து வெள்ளவத்தைக்கு கிளாஸுக்கு வாறதுக்கிடையில மூண்டிடத்தில இறக்கிபோட்டாங்கள்.அதுதான் 102 வேணாம் என்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38249

சிவேந்திரன்

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் ஒன்றான ஊர்காவற்றுறையில் உள்ள நாரந்தனை எனது சொந்த ஊர்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பட்டப்படிப்பை முடித்தபின் தினக்குரல் பத்திரிகையில் பத்திரிகையாளராக இணைந்துகொண்டேன்.ஜனநாய செயற்பாட்டில் ஊடகத்தின் பங்கு என்ற டென்மார்க் அரசின் புலமைப்பரிசில் பயிற்சிநெறியை இக்காலகட்டத்தில் பூர்த்திசெய்துள்ளேன்.2006 இல் நாட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறி ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர் நலன்பேணும் பிரிவில் வேலை செய்த பின்னர் தற்போது மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறேன்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/38313