Tag Archive: சிவா கிருஷ்ணமூர்த்தி

கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்  

[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என  அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116317

சிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். யாவரும் கேளிர் அருமையாக இருந்தது. கோலத்தின் புள்ளிகள் போன்ற தனி தனியான ஒரு மனிதரின் எண்ண ஓட்டங்கள் இணைக்கப்பட்டு அழகாக வந்துள்ளது. பிரித்து கொண்டே செல்லுதலும், மேல் இருந்து கீழே நகர்த்தி வைத்தலுமான மனம் எல்லா வண்ணங்களிலும், நிலங்களிலும் உண்டு. ஒதுக்கப்பட்டவன் தன் வலியை தன் அகம்பாவத்தை வெல்ல பயன்படுத்துவானா என்பது இரு ரயில் நிலைய நிறுத்தத்துக்குள் முடிவு செய்யப்படும். சிவாவின் கதை என்றென்றும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. உறவு என்பது என்ன என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38026

புதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி

“அய்யோ அம்மா” என்ற டேனியின் சப்தம் கோல்செஸ்டர் ரயில் ப்ளாட்பார புறாக்களை பதற அடித்தது. அவை கூட்டமாக திடுக்கிட்டு சட்டென எழும்பி சற்று தூரம் போய் அமர்ந்தன, ஒரு குட்டி அலை போல. டேனியின் கவனம் எங்கோ இருந்தது. இல்லையெனில் இப்படி, அதுவும் அனைத்து படிகளையும் ஒழுங்காக ஏறி கடைசி படியிலிருந்து தரைக்கு கால் வைக்கும் போது கவனக்குறைவாக காலை வைக்க மாட்டார். வழுக்கி, அனிச்சையாக கத்திக்கொண்டே முன் சாயும் போது இடது கையை தடவி படிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36570

சிவா கிருஷ்ணமூர்த்தி

பெயர்: சிவக்குமார் கிருஷ்ணமூர்த்தி படிப்பு: கணினி அறிவியலில் முதுகலை தொழில்: கணினித்துறை இருப்பிடம்: ஊர் நாகர்கோவில் மற்றும் ஈரோடு. தற்போது, கிட்டதட்ட 10 வருடங்களாக மனைவி, இரு குழந்தைகளோடு பிரிட்டனில் வசித்து வருகிறேன். ஆர்வங்கள்: வாசித்தல் மற்றும் விளையாட்டுகள் (விளையாடுதல், தொடர்தல்)

Permanent link to this article: https://www.jeyamohan.in/36683