குறிச்சொற்கள் சிவதர்

குறிச்சொல்: சிவதர்

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66

வேதியரின் நான்கு எரிகுளங்களிலும் அனல் எழுந்து கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. இடுகாட்டில் ஒலிக்கத்தக்க ஒரே வேதம். ஆனால் அதிலுள்ள சொற்களில் பெரும்பகுதி பிற மங்கல வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை தங்கள் அணிகள்...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65

சுப்ரதர் மீண்டும் சாலைக்கு வந்தபோது கொம்பொலியை கேட்டார். முதற்கணம் அது ஏதோ காட்டுப்பறவையின் குரலெனத் தோன்றியது. பின்னர் அது கொம்பொலி எனத் தெளிந்ததும் அவர் உள்ளம் துடிப்புகொண்டது. சம்பாபுரியின் கொம்பொலி. அதை ஊதுபவனையே...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26

இரவுக்குரிய ஆடைகளை கர்ணனுக்கு அணிவித்துவிட்டு தலைவணங்கி ஏவலன் மெதுவாக பின்னடி வைத்துச் சென்று குடிலின் கதவை மூடினான். கர்ணன் கைகளை மேலே நீட்டமுடியாதபடி அந்த மரக்குடிலின் அறை உயரம் குறைவானதாக இருந்தது. கொடிகளை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12

இருண்ட ஆழங்களில் நிழலுருவாக நெளியும் பல்லாயிரம்கோடி நாகங்களை நான் காண்கிறேன். மண்ணுக்கு மேலும் விண்ணின் அடுக்குகளிலும் செழித்து கிளைவிட்டு நிறைந்துள்ள அனைத்துக்கும் அவையே வேர்கள். அவற்றின் நெளிவுகளே பின்னி மாளிகைகளாகின்றன. சாலைகளும் தெருக்களும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11

நெடுங்காலம் கழித்து கர்ணன் அந்த வில்லைப்பற்றி நினைவுகூர்ந்தான். அப்போது அவன் தன்னிலையில் இருக்கவில்லை. அஸ்தினபுரியில் வேள்விச்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு தன் மாளிகைக்குத் திரும்பிய கணம் முதல் வெறிகொண்டு மது அருந்திக்கொண்டிருந்தான். வயிறு மதுவை தாளாமல்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10

காளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9

நீராட்டறையிலிருந்து திரும்புகையில் அங்கநாட்டுப் படைகள் குருக்ஷேத்ரத்தை நோக்கி கிளம்புவதற்கான போர்முரசு மிக அண்மையிலென ஒலிக்கக் கேட்டு கர்ணன் திடுக்கிட்டான். மாளிகைக்கு நேர் கீழே முற்றத்தில் அவ்வோசை எழுவதாகத் தோன்றி அவன் சாளரக்கட்டையைப் பற்றி...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8

சிவதர் கதவை ஓசையின்றி திறந்து உள்ளே வந்து தலைவணங்கினார். கர்ணன் அத்தனை பொழுதும் தான் அசைவில்லாமல் அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். நெடும்பொழுது அசைவற்றிருந்ததனால் உடற்தசைகளில் எடை கூடி மெல்லிய உளைச்சல் ஏற்பட்டது. விழிகளைத்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7

குருக்ஷேத்ரத்திற்குத் தென்கிழக்கே அமைந்திருந்த சிறிய எல்லைக்காவல் கோட்டையாகிய சிபிரம் அங்கநாட்டுப் படைகளின் தலைமையிடமாக மாறியிருந்தது. மண்குழைத்து கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டில் படைகள் பாடிவீடுகளை அமைத்து பதினேழு நாட்களாக தங்கியிருந்தன. அவ்விரவில்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 2 அக்கோடையில் கர்ணன் சம்பாபுரிக்கு தெற்காக அமைந்த தென்புரி என்னும் அரண்மனையில் தங்கியிருந்தான். அரண்மனையை ஒட்டிய சிறிய அவைக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் குடியவையும் அரசவையும் கூடின. ஆனால் அவை மிகச் சிறிய அளவில்...