Tag Archive: சிவஞான போதம்

இமயச்சாரல் – 6

கமல் சிங் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சொந்த ஊர் உதய்பூர் அருகே என்று சொன்னார். துணை கமாண்டன்ட் பதவியில் இருப்பவர். நாங்கள் கிளம்பும்போது வெளியே வந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். எங்களுடன் உள்ளூர் ஷியா முஸ்லிமான மக்புல் என்பவரை அனுப்பினார். பத்தான் பேருந்து நிலையம் அருகில் இருந்த சங்கரகௌரீச்வரம் என்ற புராதனமான ஆலயத்திற்குச் சென்றோம். இது அங்கே ஒரு நகர் சதுக்கம் போலவே பயன்படுத்தப்படுகிறது. பிரம்மாண்டமான சிவ ஆலயம் ஒன்று இருந்திருக்கிறது. இன்று அதன் அடித்தளமும் சுவர்களும் மட்டும்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58652