Tag Archive: சிலைகள்

சிலைகள்: கடிதங்கள்

அன்புள்ள ஜெ , உங்களின் யாருக்கு சிலை வைக்கலாம் என்ற கட்டுரையில், 1)வெள்ளையனுக்கு எதிராக சுதந்திரம் கேட்டுப் போராடிய, ஹரிஜனங்களுக்கு பூணூல் போட்ட, கண்ணன் பாட்டுப் பாடிய, நெற்றியில் நீறு, குங்குமத்துடன் தமிழ் போல் எங்கும் காணோம் என்ற பாரதியையும் 2)வெள்ளையனுக்கு நாடகம் நடத்திப் பணம் சேர்த்துக் கொடுத்து சுதந்திரம் வேண்டாம் என்ற, பிராமணர்களின் பூணூலை அறுத்த, ராமருக்கு செருப்பு மாலை மாட்டிய, குளிக்காமல் நாத்திகம் பேசி தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற ஈ வே ராமசாமியையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79124/

சிலைகள்: கடிதங்கள்

ஜெவின் தளத்தில் இன்றுவந்துள்ள சிலைகள் பற்றிய பதிவு ஆர்வமூட்டுவது. அவரது பட்டியலில் இடம் பெற்றவர்கள் குறித்து எனக்குப் பூரண திருப்தி .தொடர்ந்து நாம் சில ஆளுமைகளைச் சொல்லாம். இதில் விடுபட்டதாக நான் நினைப்பது. முதலில் ராஜாஜி (பொது வாழ்க்கையில்) .ஏனெனெற்றால் அவர் ஒரு அரசியல் வாதியாக இருந்தாலும்,இலக்கியவாதியும் கூட.இருந்தார். அவரது சக்கரவர்த்தித் திருமகன், மற்றும் வியாசர் விருந்து இல்லாமல் 20ம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு இராமாயண மகாபாரத அறிமுகம் பரவலாகியிருக்க வாய்ப்பில்லை. மேலும், குடிக்கு எதிராகவும் தீண்டாமைக்கு எதிராகவும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79002/

சிலைகள்- ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ, நமக்குரிய சிலைகள் வாசித்தேன்.யாருக்குச் சிலைகள் வைக்கலாம், கூடாது என்கிற உரையாடலை இன்னும் முன்னேறிய தளத்திற்குக் கொண்டு போனால் என்ன? அதாவது, எதற்குச் சிலைகள்? அதன் மரபுக்கு ஏதேனும் அறிவார்ந்த இடம் உண்டா? பொதுப்புத்தியில் நிலைகொண்டுவிட்ட மதிப்பீட்டை அறிவுஜீவிகளும் கேள்விக்குட்படுத்தாமல் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்? சிவாஜிக்குச் சிலை தேவையா என்பதை விவாதிப்பது போல் சர் சி.வி.ராமனுக்கும் கணிதமேதை ராமானுஜத்திற்கும் சிலைகள் தேவையா, நினைவு மண்டபங்கள் அவசியமா என்று ஏன் நாம் விவாதிப்பதில்லை? இவ்விடயத்தில் அறிவுஜீவிகளும் மரபின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78955/

சிலைகள், மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஞானமுத்து தேவநேயன் என்ற தேவநேயப்பாவாணருக்கு சிலை வைப்பது சரியாக இல்லை- அதாவது உங்கள் காரணங்களால் . தேசநேயரின் எவ்வொரு பக்க எழுத்திலும் அபத்தங்களும், மொழி வெறியும், மற்ற மொழிகள் மீது காழ்ப்பும் , ஜாதிகாழ்ப்புகளும் தளும்பி நிற்கின்றன. மொழியியல் சார், அல்லது அறிவுசார் கருத்துக்களை காண முடியாது. உதாரணமாக மொழியாராய்ச்சி என்ற கட்டுரையை ( http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=204&pno=1) எடுத்துக் கொள்வோம். ” உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் Turanian, Semitic, Aryan என முப்பெருங் கவைகளா யடங்கும்” . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78953/

சிலைகள் -கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். உங்கள் பார்வையில் நாட்டில் ‘சிலை’ வைக்க தகுதி உடையவர்களின் பட்டியலை கண்டேன். அதில் நீங்கள் தெரிவு செய்து இருப்பவர்களில் ஒரு சிலரை பற்றி ஓரளவு தான் அறிந்து இருந்தாலும்,தங்களின் தேர்வில் முழு நம்பிக்கை உண்டு,ஆனால் இரண்டு விசயங்களில் தங்களிடம் இருந்து மேலும் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். ஓன்று திரு. ஈ.வே.ராமசாமி அவர்களை பற்றியது.அவரைப் பற்றிய தகவல்களை பல இடங்களில் இருந்து அறிந்தாலும்,உங்கள் மூலம் (உங்கள் வலைத்தளம்) தான் அவரைப் பற்றி மிகச் சரியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78900/

தெய்வத்தின் முகங்கள்

அன்புள்ள ஜெ, நலமா ? உங்கள் ‘திருமுகப்பில்’ கதையை ஒருமுறை படித்திருக்கிறேன். அப்போது, எனக்கு அது சரியாகப் புரியவில்லை. என் நண்பன் ஜோசப், பல சமயங்களில் தன்னை, ‘மூன்றாம் உலகக் கிறித்தவன்’ என்று சொல்லிக்கொள்வான். அவனுடன், எட்டு வருடங்களுக்குமுன், தலைக்காவேரி அருகே உள்ள பைலாகூப்பேவிலுள்ள திபேத்திய மடாலயத்திற்கு சென்றிருந்தேன். சீன முகமுடைய புத்தரைப்பற்றி அவன் பேசியபோது, “புத்தருக்கு எப்படி சீன முகம் இருக்கலாம்? இந்திய முகந்தான் இருக்கணும்” என்று நான் சொல்ல, அவன் சிறிது நேரம் பார்த்துவிட்டு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26442/