Tag Archive: சிலுவையின் பெயரால்

என்றுமுள கண்ணீர்

கிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின் தெய்வம். எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன என் கிறிஸ்துவை சொற்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79377

சிலுவையின் பெயரால்:கடிதம்

அன்புள்ள ஜெ, கடந்த சில நாட்களில் தங்களின் சிலுவையின் பெயரால் புத்தகத்தை முடித்தேன். இப்படி ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதியதற்கு என் வாழ்த்துக்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பல காலங்களாக மதங்களுக்கு இடையில் உரையாடல்கள் தர்மங்களின் அளவிலேயே இருந்தது என்று தோன்றுகிறது. எனக்கும் அப்படி இருந்தால்தான் சரி என்று படுகிறது. எந்த மதமானாலும் ஒருவன் ஆன்மீக பயணத்தில் தர்மத்தை மீறி எதுவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12339

சிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்

தங்களது ‘சிலுவையின்பெயரால்’ என்ற நூலை வாசித்து வியப்படைந்ததோடு மகிழ்ந்தேன். தங்களை மனமார வாழ்த்திப்பாராட்டுகிறேன்.பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கண்ணோட்டத்தோடு உங்களது சிந்தனையை அள்ளித்தந்துள்ளீர். தங்களது இந்நூல் பலராலும் படிக்கத்தக்கது. கிறிஸ்து இயேசுவை ஆழ்ந்த ஆன்மீகத்தின் கண்ணோட்டத்தில் காண்கிறீர்கள். மற்ற வெளிப்புற அணுகுமுறைகளை வெறுக்கிறீர்கள். மிகச்சரியான பார்வை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8369