Tag Archive: சிலிகான் ஷெல்ஃப்

ஆகவே கொலை புரிக!

நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம் என்பதை விட, புத்தக அறிமுகம் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒரு ஏழெட்டுப் பேர் மாதமொரு முறை கூடி ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறோம். நான் மட்டுமல்ல இந்தக் குழும உறுப்பினர்கள் பலரும் ப்ளாக் எழுதுகிறார்கள். கூகிளில் buzz-கிறார்கள். ட்விட்டர், ஃ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23725

இலக்கியமும் சிலிக்கானும்

ஃபேஸ்புக் வந்தபின்னர் இணையப்பக்கங்கள் அனேகமாகச் செயலிழந்துவிட்டன. ஃபேஸ்புக் நிரந்தரமான ஒரு வட்டத்திற்குள் உள்ளவர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அல்லது பார்க்கப்படுகிறது. ஆகவே பரபரப்பான வாசிப்புக்காக எதையாவது எழுதியாகவேண்டிய நிலை. நிதானமாக இலக்கியம், தத்துவம் போன்றவற்றுக்கான தளங்களை தேடிவருபவர்கள் குறைந்துவிட்டனர் ஆர்வி பிடிவாதமாக நடத்திவரும் சிலிகான் ஷெல்ஃப் இணையப்பக்கம் இலக்கியத்தை தொடர்ந்து விவாதித்து அறிமுகம் செய்து வருகிறது. தொடர்ச்சியாக இலக்கியவாசகன் என்பவன் யார், இலக்கியவிமர்சனம் எதற்காக என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கும் குறிப்புகள் விவாதத்திற்குரியவை இலக்கியவாசகன் யார்?

Permanent link to this article: https://www.jeyamohan.in/80520

நாஞ்சில் சிலிக்கானில்

தமிழில் பெரும்பாலான இணையதளங்கள் தேங்கி நின்றுவிட்டன. வலைப்பதிவர்களில் ஒருசிலரே ஊக்கமுடன் எழுதுகிறார்கள். தொடர்ச்சியாக வெளிவருபவை பெரும்பாலும் வெட்டிஆசாமிகளின் சினிமா- அரசியல் மொக்கைகள். ஊடாக அவ்வப்போது பீரிட்டுக் கிளம்பும் வசையர்களின் தளங்கள். உண்மையில் இணையத்தில் வாசிப்பவர்களுக்கு உருப்படியாக வாசிக்க எதுவுமே இல்லையே என்ற எண்ணம் எழும் பிடிவாதமாக வந்துகொண்டிருக்கும் தரமான இணையதளங்களில் முக்கியமானது சிலிகான் ஷெல்ஃப். நான் தொடர்ச்சியாக வாசிக்கும் தளம் அது. நண்பர் ஆர்வி விடாமல் பதிவேற்றம் செய்துவருகிறார். முழுக்கமுழுக்க நூல்களைப்பற்றிய தளம். அவரது நண்பர்களான பக்ஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29862