Tag Archive: சிலப்பதிகாரம்

பளிங்கறை பிம்பங்கள்

மணிமேகலை தமிழில் அதிகமாக விவாதிக்கப்படாத ஒரு காவியம். அஸ்வகோஷரின் புத்தசரிதம் காவியமாக கொள்ளப்பட்டாலும் அது வரலாற்றுநூலே. மணிமேகலைதான் பௌத்தமரபில் எஞ்சியிருக்கும் ஒரே சுதந்திரமான முழுமையான காவியம். இருந்தும் அது அதிகமாக விவாதிக்கப்படாமைக்கு முக்கியமான காரணத்தை அதைச் சிலம்புடன் ஒப்பிட்டால் அறியலாம். சிலம்பு பாட்டிடையிட்ட உரையுடைச்செய்யுள் என்னும் வடிவத்தில் அமைந்தது. அதிலுள்ள அழகான பகுதிகள் எல்லாமே கானல்வரி, வேட்டுவர் வரி, ஆய்ச்சியர் குரவை போன்ற பாடல்கள்தான். மணிமேகலை முழுக்க முழுக்க ஆசிரியப்பாவில் அமைந்தது, கிட்டத்தட்ட உரைநடைபோன்றது அந்த யாப்பு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26472

தமிழக வரலாறு தொடங்குமிடம் எது?

ஒரு சமூகம் எப்போது தன்னுடைய வரலாற்றை பதிவுசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ அப்போதே அந்தச்சமூகத்தின் பண்பாடு முதிர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தன்னைப்பற்றிய ஒரு தெளிவான சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டபின்னர்தான் அச்சமூகம் ‘தான்’ என்றே உணர்கிறது. அந்த உணர்வில் இருந்துதான் தன்னுடைய இறந்தகாலத்தை அடியாளம் கண்டு வகுத்துக்கொள்கிறது. அதை தன்னுடைய எதிர்காலநினைவுக்காக கையளிக்கவேண்டும் என்று திட்டமிடுகிறது. அதன்விளைவாகவே அது ஏதேனும் ஒருவடிவில் தன் வரலாற்றை பதிவுசெய்ய முயல்கிறது. வரலாற்றுணர்வு உருவாவதற்கு நெடுங்காலம் முன்னரே அச்சமூகம் இருந்துகொண்டிருக்கும். அதன் வாழ்க்கையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58364

வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

சௌம்யநாராயணன் [பிரவாஹன்]  திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின்  ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20607

சிலம்பு ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கீழ்க்கண்ட சுட்டியில் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கட்டுரை வாசிக்க நேர்ந்தது. http://www.thinnai.com/?module=displaystory&story_id=60108253&format=html முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் சிலப்பதிகாரத்தை அணுகியுள்ளார். அவருடைய வாதங்கள் சரி/தவறு என்பதைத் தாண்டி, அப்படியும் யோசிக்க இடமிருக்கிறது என்று படுகிறது. உதாரணத்துக்கு சில பத்திகள், “ஆனால் கண்ணகி இத்தகைய தமிழ் மரபிலும் வந்தவளாகத் தெரியவில்லை. கோவலன் மாதவியிடம் சென்றதற்காகக் கடிந்து ஒரு சொல்கூடப் பேசவில்லை. கற்பைப்பற்றிய அவளுடைய ‘அப்செஷன் ‘ தான் காவியம் முழுவதும் பேசப்படுகிறது. மாதவி கோவலனைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8920