Tag Archive: சிற்றிதழ்கள்

பாரதியும் கனவுகளும்

 வணக்கம் ஜெ பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம். இதற்கு முன் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் மட்டுமே படித்திருந்த எனக்கு இந்நூல் அவரைப்பற்றி மேலும் பல தகவல்களை தந்தது. பாரதி பெரும்பாலும் மற்றவர்களை பாண்டியா என்றே அழைப்பாராம். தமிழர்கள் அனைவரும் பாண்டியன் வழி வந்த மன்னர்கள் என்பாராம். சென்னையில் ஒருசமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115212

சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

இந்திய அரசுப் புலனாய்வுத்துறை சமீபகாலமாக தமிழ்ச்சிற்றிதழ்களை கூர்நோக்குக்கு உட்படுத்தியதை சிற்றிதழ் வாசகர்கள் அறிந்திருப்பர். பூடக மொழியில் வெகுசில பிரதிகளே அச்சிட்டு நாலுபேர் கண்ணில் படாமலேயே வினியோகிக்கப்பட்டு வரும் இந்த இதழ்கள் தீவிரவாதிகளின் செய்தி ஊடகங்களாக இருக்கலாமென்ற ஐயம் ஏற்படவே அனைத்து இதழ்களையும் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியபோது மேலும் குழப்பம் ஏற்பட்டது.ஆகவே திரு.கெ.எஸ்.பார்த்தசாரதி ஐபிஎஸ் [புலனாய்வுத்துறை ஆணையர், ஓய்வு] முனைவர்.வல.சுப.அதியமான் [தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் பல்கலை, ஓய்வு] மற்றும் திரு ‘பூதத்தான்’ [இதழாளர், இலக்கிய விமரிசகர்] ஆகியோர் அடங்கிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/249

361 டிகிரி

சிற்றிதழ்களுக்கான ஒரு தேவை மீண்டும் உதயமாகியிருக்கிறதா என்ன? தொடர்ச்சியாக இவ்வருடம் பல சிற்றிதழ்களைப் பார்க்கமுடிகிறது. ஏதோ ஒரு தேவை இல்லாமல் இவ்விதழ்கள் பலமுனைகளில் இருந்து வெளிவர முடியாது. அந்த தேவை என்ன? [சந்திரா ] ஒரு வசதிக்காக மூன்றாயிரம் பிரதிகளுக்குமேல் விற்கும் இதழ்களை நடுத்தர இதழ்கள் என வகுத்துக்கொள்கிறேன். காலச்சுவடு,உயிர்மை,தீராநதி, அமிர்தா, உயிர்எழுத்து ஆகிய நான்கு மாத இதழ்கள் தொடர்ந்து வருகின்றன. வாரம் ஒன்று எனக் கொள்ளலாம். அவையெல்லாமே விரிந்த தாளில் அறுபது பக்கங்கள் வரை இடமுள்ளவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22169

அண்ணா ஹசாரே மீண்டும்

அண்ணாஹசாரே அவர்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் டெல்லி அரசு அடக்குமுறையைக் கையாள்வதும், சில நாட்களுக்கு முன் பிரதமர் இவ்விசயத்தில் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததும் பார்க்கும் போது ஹசாரே குழுவினரின் வேண்டுகோளை முற்றிலும் நிராகரிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, இருந்தாலும் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இருக்கும் ஹசாரே அவர்களைக் கைது செய்து 7 நாட்கள் காவலில் வைப்பதாக அறிவித்த போலீஸ் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அவர் இன்று விடுதலை செய்யபடுவதாகத் தெரிகிறது, கூடிய விரைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19730

அகநாழிகை

அகநாழிகை பதிப்பக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். அகநாழிகை டிசம்பர் 2009 இதழில்…. நேர்காணல் : மனுஷ்யபுத்திரன் கட்டுரைகள் : பாவண்ணன், அஜயன்பாலா சித்தார்த், ஜெயமோகன், சு.தமிழ்ச்செல்வி, ரா.கிரிதரன், செந்தி சிறுகதைகள் : கே.பாலமுருகன், லஷ்மி சரவணக்குமார், அதி பிரதாபன், சாரதா, நிலாரசிகன், அ.மு.செய்யது மொழிபெயர்ப்பு : எஸ்.ஷங்கரநாராயணன், நதியலை, சாந்தாதத் நாடகம் :  வளர்மதி கவிதைகள் : விக்ரமாதித்யன், அய்யப்பமாதவன், பெருந்தேவி, திலகபாமா, உமாஷக்தி, கதிர்பாரதி, சந்திரா, நளன், சுகிர்தா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5545

மனைவியின் கடிதம்

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள் அபாரமான ஒரு தனியுலகம். தனியொருவர் தன் இருப்பை வெளிக்காட்டிக்கொள்வதற்காக நடத்தும் சிற்றிதழ்கள் முதல் சிறிய குழுக்கள் நடத்தும் சிற்றிதழ்கள் வரை எத்தனை வகைகள். எத்தனை எழுத்துக்கள்.   பொதுவாக தமிழின் சிற்றிதழ்களில் அறிதலுக்காக வாசிக்கத்தக்கவை குறைவே. எளிய வாசிப்பும் எளிய இலக்கியப்புரிதலும் கொண்டவர்கள் தங்கள் குரலைப் பதிவுசெய்வதற்காக நடத்தும் இதழ்களே அதிகம். ஆனால் இந்த முயற்சிகள் எவையுமே வீணல்ல என்பதே என் எண்ணம். தமிழ்ச்சூழலின் அறிவியக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சலியாத முயற்சியின் சரடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5419

பண்பாட்டை பேசுதல்…

சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்தபோது நண்பர் கெ.பி.வினோத் உயிர்மை இதழுடன் வந்தார். நான் அதைவாங்கி புரட்டிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் பேசி முடித்தபோது நான் உயிர்மையை மேஜைமேல் போட்டிருந்தேன். அவர் கிளம்பும்போது ”எடுத்துக்கொள்ளுங்கள்” என்றேன். ”நீங்க படிக்கலியே ”என்றார். ”படிச்சுட்டேனே” என்றேன் நான்.அவருக்கு ஆச்சரியம் உயிர்மையில் மூன்று விஷயங்கள் மட்டுமே படிக்கத்தக்கவை என்பது என் எண்ணம். முதலிடம் தியடோர் பாஸ்கரனின் சூழியல் கட்டுரைகள். இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதும் கட்டுரைகள். மூன்றாவதாக ஷாஜியின் இசைக் கட்டுரை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3079

பெருவெளி

பெருவெளி-இதழ் அளவிலும் பெரியது( A4 Size), பக்கங்களும் அதிகமுள்ளது(102). பாலஸ்தீனியர்களால் தேசியக்கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட மறைந்த கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆகஸ்ட் பற்றி ஒரு அஞ்சலிக் கட்டுரை உள்ளது. (கவிஞராக, செயல்வீரராக, இயக்கப் போராளியாக இருந்தவர். இந்த நூற்றாண்டின் ஒரு கலைஞன், அறிவுஜீவி எப்படி ஒரு போராட்ட உந்து சக்தியாக மாறுகிறான் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். கவிதை உலகை மாற்றிவிடாது என்றாலும் ஒரு போர்க்குணமிக்க மனிதனை அதுதான் உருவாக்குகிறது என்றவர்.)   இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2333

வார்த்தை

வார்த்தை மாத இதழின் இரு இலக்கங்கள் வந்துவிட்டன. முதலிதழில் அட்டை வித்தியாசமானதாக இருந்தாலும் உள்ளே தாளின் தரம் மிகச்சாதாரணமாக இருந்தது. ஜீவாவின் ஓவியங்களும் முதிர்ச்சியற்றவையாக இருந்தன. இரண்டாமிதழில் அக்குறைகள் களையப்பட்டமையால் இதழின் காட்சித்தரம் சிறப்பாக இருக்கிறது. இன்றைய சூழலில் அதுவே ஒரு முக்கியமான அம்சமாகும். இதழின் தளம் பற்றிய குழப்பம் இன்னும் அவர்களிடமே நீடிக்கிறது என்று படுகிறது. திண்ணைபோல எல்லா தரப்பினருக்கும் உரிய குரலாக இருக்கவேண்டும் என்ற ஆவல் ஒருபக்கம். ஜெயகாந்தனை மையமாகக் கொண்ட முற்போக்கு இலட்சியவாதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/450

இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் …..நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?… அன்புள்ள சடகோபன் உங்கள் கேள்வி முதல் நோக்கில் தர்க்கப்பூர்வமானவையாகப்படும். ஆனால் தமிழ்ச் சூழலை சற்று அறிந்தவர்களுக்கு இக்கேள்வியே எழாது. விகடனும், குமுதமும் வணிக நிறுவனங்கள். வணிக மதிப்பை மட்டுமே முன்னிறுத்துபவை. அவை எந்த இலக்கிய மதிப்பீட்டையும் முன்வைப்பதில்லை. எல்லா வணிக ஊடகங்களும் அவை எதிர்கொள்ளும் சமூகத்தில் உள்ள எல்லா போக்குகளையும் எப்படியோ பிரதிநிதித்துவப்படுத்தும். குமுதத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/233

Older posts «