Tag Archive: சிறுகதை.

சிறுகதைகள் கடிதங்கள் 18

அன்புள்ள ஜெ, என்னுடைய முந்தைய மின்னஞ்சலில் சிலவற்றை சொல்லாமல் விட்டிருந்தேன். அதை இதில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் கருத்துக்களை தங்கள் வலைப்பதிவில் போடுவதாக இருந்தால் இதையும் முந்தைய மின்னஞ்சலுடன் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். ஒரு அறிவியல் கதை என்பது ஒரு அறிவியல் கருத்தை அடிப்படையாகக் தான் அமைகிறது. Space Travel, Time Travel போன்ற அறிவியல் கருத்துக்கள் கொண்ட கதைகளில் மிகைக்கற்பனை சாத்தியமாகிறது. அக்கதைகளில் மிகைக்கற்பனை எளிதாக பொருந்தி வருகிறது. ஆனால் Chaos Theoryபோன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92869

சிறுகதைகள் கடிதங்கள் 17

  அன்புள்ள ஜெமோ கதைகளை வாசித்துமுடித்துவிட்டு உங்கள் மதிப்புரைக்காகக் காத்திருந்தேன். நீங்கள் சொன்ன பலவிஷயங்களுடன் உடன்படுகிறேன். பெரும்பாலான சிறுகதைகளில் ஆனந்த விகடனின் க்ளீசேக்கள் நிறைந்திருந்தன. ஆசிரியரே கதைக்குள் வந்து ‘அப்புறம் என்ன ஆச்சு’ என்பதுபோன்ற வரிகளும் க்ளீசேக்ககள்தான். அதையெல்லாம் தனியாக வாசித்துப்பார்த்து களையெடுத்தாகவேண்டும் என்பதுதான் என் எண்ணம் ஆனால் நிறையபேர் எழுதுவது உற்சாகமூட்டுவதாக இருந்தது. அவர்களுக்கு இவ்வளவு வாசகர்கள் இல்லை. இப்போது இத்தனைபேர் வாசிப்பதே அவர்களுக்கு அதிர்ச்சியானதாகத்தான் இருக்கும் பிரியம்வதாவின் குறிப்புக்களை நான் விரும்பி வாசித்தேன். நல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92854

சிறுகதைகள் கடிதங்கள் 16

  வணக்கம்.   தங்களின் வார்த்தைகள் என்னை என் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. வேறேதும் சொல்ல இயலவில்லை.   எத்தனையெத்தனை அலுவல்களுக்கு மத்தியில் பதினைந்து கதைகளை எடுத்துக் கொண்டு இத்தனை நீளமான விமர்சனமும் அது தொடர்பான சங்கதிகளையும் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்த தங்களுக்கு அத்தனை எழுத்தாளர்களின் சார்பாகவும் நன்றி என ஒற்றை பதத்தை சமர்ப்பிக்கிறேன்.. உளமார.   அன்புடன் கலைச்செல்வி.     ஜெ   சிறுகதைகளை வாசித்தேன். பலகதைகளைப்பற்றி நான் என்ன நினைத்தேனோ அதையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92789

சிறுகதைகள் கடிதங்கள் -15

    அன்புள்ள ஜெ   இந்தச்சிறுகதை விவாதத்தின் உச்சம் என்பது பிரியம்வதா எழுதிய விரிவான வாசகர்குறிப்புகள்தான். இத்தகைய வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்பது தமிழில் எழுதும் அத்தனைபேருக்கும் எச்சரிக்கைபோல.மிகக்கூர்மையான அவதானிப்புகள். பிரியம்வதா தமிழில் நிறைய எழுதவேண்டும் [அதேபோல கொற்றவை பற்றி எழுதியிருந்த சுசித்ரா. என்ன ஒரு தெளிவான நடை. ஆழமான பார்வை!]   சுவாமி   சுசித்ரா கடிதங்கள் பிரியம்வதா விமர்சனங்கள் *   அன்புள்ள ஜெ சிறுகதைகளைப்பற்றிய  உங்கள் மதிப்பீடுகளை வாசித்தேன். அவற்றின் விரிவான விவாதத்தன்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92756

சிறுகதைகள் கடிதங்கள் -14

[தருணாதித்தன்] அன்புள்ள ஜெயமோகன்,   நன்றி. ஒவ்வோரு நாளும் இவ்வளவு எழுதிக் கொண்டு, இவ்வளவு படித்துக் கொண்டு, நண்பர்கள் வட்டம், பிரயாணங்கள் எல்லாவற்றுக்கும் நடுவே, புதிய எழுத்தாளர்களை ஆழ்ந்து படித்து , அவற்றைப் பற்றி விரிவான மதிப்பீடுகளுக்கு.   என்னுடைய கதைகளைப் பற்றி மிகத்துல்லியமாக எழுதி இருக்கிறீர்கள். குறைகளை மிகச் சரியாக காட்டி இருக்கிறீர்கள், அதே சமயம் எப்படி திருத்தினால் இன்னும் மேம்படும் என்ற குறிப்புகளுடன். அதுதான் எனக்கு முக்கியம். நீங்கள் சொல்லி இருக்கிற மாபெரும் முன்னோடிகள்தான் என்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92714

உற்றுநோக்கும் பறவை [சிறுகதை]

  ‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் , இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை , எம் கெ ராஜப்பன் நாயர் ஆகியோரின் எழுத்துக்களில் இவர்கள் மேற்குமலையடிவாரத்தில் சரல்கோடு என்ற ஊரில் வாழ்ந்த ஒரு பழைய மாடம்பி வம்சம் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களுடைய அட்டூழியம் எல்லைமீறிப்போனமையால் பிரிட்டிஷ் ரெசிடண்ட் மேஜர் எஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57

‘நூஸ்’

  நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் முடியும்போது சமயங்களில் கடவம் நிறைந்திருக்கும். நேராக அந்திச்சந்தைக்குப் போய் அவற்றை விற்று பணமாக்கி முந்தியில் முடிந்து கடவத்திலேயே மரச்சீனியும் மீனும் அரிசியும் வெஞ்சனமும் வாங்கிக் கொண்டு அப்படியே மண்ணாத்தி வீட்டுக்குப் பின்னால் ஒதுங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/576

அலை அறிந்தது…

[சிறுகதை]

தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8028

ஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)

எல்லாரும் கெட்டவர்கள் என்ற முடிவிற்கு வந்த பிறகு செண்பகக் குழல்வாய்மொழி ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தாள். அங்குதான் யாருமே இல்லை. பெரியவட்டமாக மண்டபம். படிகளும் வட்டம்தான். மொத்தம் ஏழு படிகள். மண்டபத் தளம் கறுப்பாக, பளபளவென்று இருந்தது. கழுவி விட்டதனால் ஈரமாக இருக்கிறதா என்று காலால் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருந்தது. ஆனால், ஈரமில்லை. கல்லாலான மரங்கள் மண்டிய பெரியகாடு போலிருந்தது மண்டபம். நாலாதிசையிலிருந்தும் நிழல்கள் உள்புறமாகச் சாரிந்து, கலைந்து கிடந்தன. ஒரு வண்டு ரீங்காரித்தபடி தூணில் மோதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76185

சிவமயம் (சிறுகதை)

பாடல் பெற்ற ஸ்தலம். வசை என்று சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிற போக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும் நடராசனை எட்டுவாரி இடக்குப் பண்ணிவிட்டுப் போனார். பிறகு வந்த ராஜாக்கள் கற்றளி எழுப்பி, அறுபத்து மூவரைக் குடியமர்த்தி, பெரியநந்தி செதுக்கி, சுற்றியுள்ள தெருக்களை அக்ரஹாரமாக ஆக்கி, உற்சவம், தேரோட்டம், உலா என்று ஒழுங்கு பண்ணிப் புண்ணியம் அடைந்தார்கள். ஒரு பத்து தலைமுறைக்கு செல்வாக்காகத்தான் இருந்தார் சுகவனேஸ்வரர். அப்புறம் தெப்பக்குளக்கரை பிள்ளையார், திடீர் மவுசு பெற்று காணிக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76183

Older posts «

» Newer posts