Tag Archive: சிறில் அலெக்ஸ்

கிறித்துவமும் அறிவியலும்

நண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற சில செயல்பாடுகள் அதற்கான குறியீடாக உலகமெங்கும் பேசப்படுகின்றன. சிறில் அந்த தரப்பை கிறித்துவத்தின் கோணத்தில் நின்று மறுக்கிறார். கிறித்துவச் சபை அறிவியலுடன் ஒரு மோதலையும் உரையாடலையும் மேற்கொண்டது என்கிறார். கிரேக்க தத்துவம், பண்டைய அறிவியல் ஆகியவற்றின் அடிப்படைகளை தன் கோணத்தில் அது ஏற்றுக்கொண்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88638

ராய் மாக்ஸம் விழா சென்னையில்

ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை வெ.அலெக்ஸ் ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன் இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை மியூசிக் அக்காதமி அருகில் நாள் 15- …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72731

வெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். இது ஒரு வழக்கமான புத்தக வெளியீட்டு விழா அல்ல. இது ஒரு கொண்டாட்டம். கால எந்திரத்திம் ஒன்றில் பின்னோக்கிச் சென்று கம்பனோ வியாசனோ வள்ளுவரோ இளங்கோவோ எழுதிக்கொண்டிருக்கும் காலத்திலேயே அவர்களின் படைப்பை படித்து அவர்களுடன் உரையாடுவது எத்தனை இனிமையான அனுபவமாய் இருக்குமோ அந்த அனுபவத்தை ஜெயமோகன் நவீன இலக்கிய வாசகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறார். மகாபாரதத்தை நாவல் வடிவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் எழுத திட்டமிட்டிருக்கிறார். வெண்முரசு முடிவடையும்போது கிட்டத்தட்ட 30ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65762

ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22384

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

முந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன் பெட்டியை திறந்து பொருட்களை எடுத்து விலாவரியாக அடுக்கியபின் சற்றே நிம்மதி அடைந்து ‘என்னத்த ஏற்புரைன்னு இருக்கு ஜெயமோகன். அங்கிண பேசினதையே இங்கிணயும் பேசிப்போடலாம்னு நெனைச்சா அங்க வந்த கும்பலிலே பாதி இங்கயும் வந்திடுது…என்னமாம் தப்பா பேசினா கிருஷ்ணன் வேற கூண்டுலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11434

சென்னைக்கு சிறில்

ந்த இணையதளத்தினை நடத்தும் நண்பர் சிறில் அலெக்ஸ் கிட்டத்தட்ட எட்டுவருடக்காலம் அமெரிக்காவில் கணிப்பொறித்துறையில் வேலைபார்த்துவிட்டு சொந்த மண்ணில் இருக்கவேண்டும் என்ற விருப்புடன் சென்னைக்கு திரும்புகிறார்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7267

சிறில் அலெக்ஸ் இசை

நண்பர் சிறில் அலெக்ஸ் இசையமைப்பாளார் என்று நம்புவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இசை தெரிந்தவர்கள்தான் அதை மேற்கொண்டு பரிசீலிக்க வேண்டும். அவரது இணையதளத்தில் அவர் சமீபத்தில் போட்ட சில இசைத்துணுக்குகளைக் கேட்டேன். எனக்கு பொதுவாக எல்லா இசையுமே பிடிக்கும் என்பதனால் மனதுக்கு நிறைவாக இருந்தது. மேற்கொண்டு ஷாஜி, ராமச்சந்திரஷர்மா போன்ற இசை விமரிசகர்கள்தான் பிச்சு பீராய்ந்து ஏதாவது சொல்ல வேண்டும். மற்றபடி நான் அவர் திருக்குறளைப்பற்றி எழுதிய நக்கல்களை ரசித்தேன் http://cyrilalex.com/?p=489

Permanent link to this article: https://www.jeyamohan.in/6060

மதமும் பூசகர்களும்

நண்பர் சிறில் அலெக்ஸ் பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகளை எழுதியிருக்கிறார். http://cyrilalex.com/?p=407

Permanent link to this article: https://www.jeyamohan.in/357

கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி. //பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது.// இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின் கதையிலிருந்தும் அதிலிருந்து பெறப்படும் பிந்தைய புரிதல்களிலிருந்தும் (1 Corinthians 11:9) இது தெளிவாகிறது. இதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தின் தொகுப்பாக இன்றும் இருக்கிறதென்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/287