Tag Archive: சியமந்தக மணி

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–70

பகுதி ஆறு : படைப்புல் – 14 தந்தையே, அந்த ஒரு நாள் ஊழின் தருணம். அது ஒரு எண்ணமாக எவ்வாறு தொடங்கியது, பலநூறு செயல்களினூடாக எவ்வாறு ஒருங்கிணைந்தது, பல்லாயிரம் பேரினூடாக எவ்வண்ணம் தன்னை நிகழ்த்திக்கொண்டது என்று துளித்துளியாக என்னால் நினைவுகூர இயல்கிறது. ஆனால் அதன் உச்சம் இவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை எத்தனை எண்ணியும் என்னால் இன்றும் நினைவுகூர இயலவில்லை. எண்ணி நெஞ்சு நடுங்கும் ஓர் நாள். என் நாவினூடாக வரும் தலைமுறைகளுக்கு செல்லவேண்டிய ஒரு நாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131951/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 77

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 2 கடல் நீர்ப்பரப்பில் படகு ஒழுகுகிறதா நின்றிருக்கிறதா என்றறியாது விழிமயக்கு ஏற்படுவது போல் சாத்யகி மணல் வெளியில் தெரிந்தான். தன் புரவியோசை அவனை எட்டிவிடக்கூடாது என்பதற்காக கடிவாளத்தை இழுத்து நிறுத்திய திருஷ்டத்யும்னன் அவனுக்கும் தனக்குமான தொலைவை விழிகளால் அளந்தான். பாலையில் அத்தொலைவை தன் புரவி எத்தனை நாழிகையில் கடக்கும் என அவனால் கணிக்க முடியவில்லை. பாலையில் விரைவதற்குரிய அகன்ற லாடம் கொண்ட சோனகப்புரவி அது. ஆயினும் பொருக்கு விட்டிருந்த செம்புழுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77790/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 1 திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சு மாளிகையிலிருந்து வெளிவந்து தேர்நிலையை அடைந்து அந்த முற்றமெங்கும் பரவி நின்றிருந்த நூற்றுக்கணக்கான புரவிகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் நோக்கியபடி எதையும் உணரா விழிகளுடன் இடையில் கைவைத்து சற்றுநேரம் நின்றான். ஏனிங்கு நிற்கிறோம் என்ற எண்ணம் முதலிலும் எதையோ எண்ணிக்கொண்டிருந்தோமே என்ற வியப்பு பின்னரும் எழுந்த உடனே தீயின் தொடுகை போல அந்நினைவு எழுந்தது. துடித்து எழுந்த உடலுடன் தன் தேரை நோக்கிச் சென்று அதில் ஏறி அமர்ந்து பாகனிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77787/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 10 கோசலத்தின் பன்னிரு பெருங்குடிகளும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் கூடிய பேரவையில் இளவரசி கௌசல்யை அரங்கு நுழைந்தாள். இளைய யாதவரை மணம் கொள்ள அவள் உளம் கனிகிறாளா என்று கோசலத்து முதுவைதிகர் கார்க்கியாயனர் வினவினார். தலைகுனிந்து விரல்களால் மேலாடையைப் பற்றிச் சுழித்தபடி “ஆம்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னதும் நிறைந்திருந்த அவையினர் எழுந்து “ஆழிவண்ணனை அணைந்த திரு வாழ்க! அவள் கரம் கொண்ட நீலன் வாழ்க! வெற்றி கொள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77760/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 72

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 7 சத்யபாமாவின் அறையை விட்டு வெளிவந்து தேர்க்கூடத்தை அடைந்ததும் அங்கே காத்திருந்த சாத்யகியின் தேரை திருஷ்டத்யும்னன் கண்டுவிட்டான். அவனை முன்னரே பார்த்துவிட்டிருந்த சாத்யகி புன்னகையுடன் இறங்கி நின்றான். அணுகிய திருஷ்டத்யும்னன் ”உள்ளுணர்வால் தங்களை இங்கு எதிர்பார்த்தேன் யாதவரே” என்றான். சாத்யகி ”தாங்கள் இங்கு என்ன பேசியிருக்கக்கூடும் என்பதை அன்றி எதையும் எண்ண முடியாதவனாக இருந்தேன் பாஞ்சாலரே. அரசவவைக்கூடத்தில் ஒரு கணம்கூட என் உடல் அசைவின்றி அமையவில்லை. உண்டாட்டு அறையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77704/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா “விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா?” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க!” என்று சொல்லி அவள் கை நீட்டினாள். திருஷ்டத்யும்னன் அமர்ந்து கொண்டான். சிறிதுநேரம் இருவரும் விழிகளை விலக்கிக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77675/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 5 மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே “தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே. நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான். “உள்ளே வந்து முகமன் சொல்வதாயின் அதற்கு மேலும் பல அரசியல் உட்பொருட்கள் விளையும். துவாரகையில் ஒவ்வொரு சந்திப்பும் நாற்கள விளையாட்டின் காய்நீக்கங்கள்தான்.” திருஷ்டத்யும்னன் “இருந்தாலும்…” என்று தொடங்க “தங்கள் சந்திப்பு நெடுநேரம் தொடர வாய்ப்பில்லை” என்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77668/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 6 முதற்கணத்தில் திரௌபதியெனத் தெரிந்த ருக்மிணி ஒவ்வொரு சொல்லாலும் சிரிப்பாலும் விலகி விலகிச்சென்று பிறிதொருத்தியாக நிற்பதை திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய மெலிந்த நீண்ட உடல் நாணம் கொள்வதற்கென்றே வடிவம் பெற்றது போலிருந்தது. ஒவ்வொரு சிறு எண்ணமும் உடலில் ஓர் இனிய அசைவாக வெளிப்பட்டன. எப்போதும் நிகர்நிலையில் நிற்கும் திரௌபதியின் தோள்களை எண்ணிக்கொண்டதுமே ருக்மிணியின் உடலால் எங்கும் நிகர்நிலையில் நின்றிருக்க முடியாது என்று பட்டது. ருக்மிணி தன் நெற்றிக்குழலை கையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76921/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 4 அக்ரூரர் கைகளைக் கூப்பியபடி “இளைய யாதவரே! நெடுங்காலம் முன்பு மதுராவை கம்சன் ஆண்டபோது ஒருநாள் அவன் தூதர்களில் ஒருவன் என்னை அணுகி மதுராவின் பெரு நிதிக்குவையில் பாதியை எனக்களிப்பதாக கம்சன் எழுதி அனுப்பிய ஓலையை காட்டினான். நிகராக விருஷ்ணிகுலத்தின் ஆதரவை நான் அளிக்கவேண்டும் என்றான். அந்நிதிக்குவை கார்த்தவீரியரால் திரட்டப்பட்டது என்று நானறிவேன். இந்த பாரதவர்ஷத்தின் பெருங்கருவூலங்களிலொன்று அது. நவமணிகளும் பொன்னும் குவிந்தது. அந்த ஓலையை அக்கணமே என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76891/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 6 காசியின் எல்லையைக் கடந்து கங்கையின் மையப்பெருக்கை படகு அடைந்தபோது திருஷ்டத்யும்னன் முதிய யாதவவீரரின் உதவியுடன் படகில் புண்பட்டுக் கிடந்த இரண்டு வீரர்களை இழுத்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தான். முதிய வீரர் அவர்களின் புண்களை திறம்பட கட்டிக்கொண்டிருந்தார். அவர் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கும்போதே கண்விழித்த ஒரு வீரன் “கன்று மேய்கிறது” என்று சொல்லி பற்களை இறுகக் கடித்து கழுத்தின் தசைகள் சற்று அதிர உடலை இழுத்து பின்பு தளர்ந்து தலைசாய்த்தான். அவர் மேலே நோக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76763/

Older posts «