Tag Archive: சிபிரர்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 31

பகுதி 7 : மலைகளின் மடி – 12 பூரிசிரவஸ் அரண்மனை முகப்புக்கு நடக்கும்போது தன் உடலின் எடையை கால்களில் உணர்ந்தான். திரும்பச்சென்று படுக்கையில் உடலை நீட்டிவிடவேண்டுமென்று தோன்றியது. முகத்தை கைகளால் அழுத்தி வருடிவிட்டு களைத்த குரலில் சேவகனிடம் “புரவியை ஒருக்கச் சொல்” என்றான். அவன் வணங்கி முன்னால் ஓடினான். எவரிடமென்றில்லாத சினம் அவனுள் ஊறி நிறைந்திருந்தது. தன் தாடை இறுகியிருப்பதை உணர்ந்து அதை நெகிழச்செய்துகொண்டான். முற்றத்திலிருந்து வந்த காற்றிலேயே மதுவின் நாற்றமும் கூட்டத்தின் ஓசையும் அனலொளியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72123

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25

பகுதி 7 : மலைகளின் மடி – 6 பூரிசிரவஸ் தன் துணைமாளிகைக்குச் சென்று சேவகர்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தான். நிலையழிந்தவனாக உடலை அசைத்துக்கொண்டிருந்தமையால் அவனுடைய சேவகனால் ஆடைகளை கழற்ற முடியவில்லை. “இளையவரே, தங்கள் வெற்றி அரண்மனை முழுக்க முன்னரே பரவிவிட்டிருக்கிறது. தங்களைப்பற்றித்தான் அனைத்து நாவுகளும் பேசிக்கொண்டிருக்கின்றன” என்று புகழ்மொழி சொன்னான் சேவகன். பூரிசிரவஸ் அவனை பொருளில்லாத விழிகளால் நோக்க அவன் உடலசைவு நின்றுவிட்டது. ஆடைகளை கழற்றியபடி “தாங்கள் பிதாமகருடன் வந்துவிட்டீர்கள். இனிமேல் பால்ஹிக குலங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71071