Tag Archive: சினிமா

அழியாச்சித்திரங்கள்

இரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில் காட்சிகளுடன் பழைய பாடல்களைக் கேட்கிறேன். சக்ரவர்த்தினீ எனக்குப்பிடித்த இந்தப்பாடலைக் கேட்டேன். அந்தப்படம் மனதை மெல்ல ஏக்கத்தால் நிறைத்தது. அதிலிருப்பவர்கள் இசையமைப்பாளர் தேவராஜன், பாடலாசிரியர் வயலார் ராமவர்மா, யேசுதாஸ். 1972இல் இப்படம் வந்திருக்கிறது. ஆனால் இந்தப்படம் இன்னும் பழையதாக இருக்கலாம். வயலார் ராமவர்மா 1975இல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25332

சினிமா – கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு, ­‘இந்திய வேளாண்மையும் உழைப்பும்’ என்னும் பதிவில் ‘எழுத்தையோ கலையையோ நம்பி வாழ்பவர்கள் சமரசம் நோக்கி செல்ல நேரிடும்’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இதை பற்றியே இரண்டு நாளாக யோசித்து கொண்டு இருந்தேன். நாலைந்து இலக்கியப்புத்தகங்களை படித்து விட்டு இங்கு இருக்கும் சினிமாவே சரி இல்லை அதனால் கலைப்படம் எடுத்து தமிழ் சினிமாவையே மாற்றி அமைக்கப்போகிறேன் என்று அசட்டுத்தனமாக நினைக்கும் கூட்டத்தில் நான் இல்லை. எந்த ஒரு கருத்தையும் அதன் வரலாற்றுடன் வைத்துப்பார்க்க வேண்டும் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67264

புறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்

சந்தியா அச்சகத்தில் சாலையோரமாக ஒரு பெரிய திண்ணை இருந்தது. பழங்கால வீடு அது. சென்னையில் அத்தகைய தெலுங்குமணம் வீசும் வீடுகள் பல இருந்தன. இரண்டுபக்கமும் திண்ணை. நடுவே உள்ள பள்ளம் வழியாக உள்ளே செல்லும் பாதைக்கு அப்பால் இருண்ட தாழ்வான அறைகள். திண்ணையில் கரிய சிமிண்ட்தரை நெடுங்காலம் பலர் படுத்து புரண்டதனால் உளுந்து போல வழவழப்பாக இருந்தது. வளையோடு போட்ட மேல்கூரை கீழே வந்து பாதி தெருவை மறைப்பதனால் உள்ளே இருந்துபார்த்தால் தெருவில் நடப்பவர்களின் இடுப்புக்குக் கீழேதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40189

நான் கடவுள் :மேலும் இணைப்புகள்

  அன்புள்ள ஜெ, மீண்டும் சில இணைப்புகள். இதற்குள் உங்களுக்கே சலித்திருக்கும். எனக்கும் மீண்டும் மீண்டும் ஒரே வகையான வரிகளை படிக்கிறேனா என்றும் எல்லாவற்றையும் முன்னரே படித்திருக்கிறேனா என்றும் சந்தேகம் வர ஆரம்பித்துவிடது. பொதுவாக இப்போது வரும் மதிப்புரைகளில் படத்தை ஓரளவு புரிந்துகொள்ளும்  முயற்சிகள் இருப்பது ஆர்வம் அளிக்கிறது. ஒரு புதிய கருவை படமாக எடுக்கும்போது அதற்கு ரசிகர்களை எப்படி தயார் செய்வது என்பது பெரிய பிரச்சினைதான். அப்படிப்பார்த்தால் நான் கடவுள் படத்துக்கு காசியையும் சண்டையையும் மட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1688

நான் கடவுள்:இணைப்புகள்

அன்புள்ள ஜெ நான் உங்கள் இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். முன்னரே ஒருமுறை உங்களிடம் தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன்.படத்தை காட்சி பூர்வமாகப் பார்ர்கும் தன்மை எனக்கு உண்டு. ஆகவே எனக்கு பாலாவின் படங்கள் மிகவும் பிடிக்கும் . உங்கள் எழுத்தும் பிடிக்கும். ஆனால் உங்கள் எழுத்துக்களைப்பற்றி எனக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அந்த அளவுக்கு விஷயம் போதாது ஆனால் பாலாவின் இந்தபப்டம் எனக்கு மிகவும் பிடித்தது. இதுதான் அவரது படங்களிலேயே மிகச்சிறந்த படம். பான் ஷாட்ஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1659

குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்

ஜெமோ, சமீபத்தில் நான் படித்த இந்த இரண்டு கட்டுரைகளும் அருமை. அதனைப் பற்றிய பாராட்டுகளைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல். முதலில் குஷ்பு குளித்த குளம் . நீங்கள் எவ்வளவு அனுபவித்து எழுதினீர்கள் என்று தெரியாது ஆனால் நான் மிகவும் ரசித்துப் படித்த கட்டுரை இது. எல்லா இடங்களிலும் நடப்பதைப் பற்றியும் தமிழனின் தீராத திரைப்பட மோகத்தையும் அருமையாக விவரித்துள்ளீர்கள். இந்த கட்டுரையின் தாக்கத்தில் நேற்று ஒரு நண்பருடன் சென்னையில் அலையும் பொழுது ஒவ்வொரு இடத்திற்கும் சினிமாவில் வந்ததைப் பற்றிச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/585

இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சாப்ளின் மற்றும் பஸ்டர் கீட்டன் பற்றிய குறிப்புகள் அருமையாக இருந்தன. ஓயாமல் உலக சினிமா பற்றி எழுதும் நம்முடைய சினிமா விமரிசகர்கள் யாராவது பஸ்டர் கீட்டன் பற்றி எழுதியிருக்கிறார்களா? செல்வம் அன்புள்ள செல்வம். எனக்குத்தெரிந்த வரை தமிழில் யாருமெ ழுதியதில்லை. இரு இணைப்புகளை நண்பர் ரகுநாதன் கனகராஜ் அனுப்பித்தந்தார். http://www.youtube.com/watch?v=3TMjTVeVHtk&feature=related http://www.youtube.com/watch?v=-I_slVqEM1k&NR=1 அன்புள்ள ஜெயமோகன் தங்களைப் பற்றி எழுதாமல் சாருவால் இருக்க முடியவில்லயே.உங்களின் விசாரிப்பு (ஹெல்த் எப்படி இருக்கு) பற்றி நையாண்டி செய்திருக்கிறாரே… சாமி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/383