Tag Archive: சித்ராங்கதன்

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 10 ராஜபுரத்தின் அளவுக்கு பொருத்தமில்லாமல் மிகப்பெரிதாக இருந்தது அரண்மனை. கங்கை வழியாக கொண்டுவரப்பட்ட இமயச்சாரலின் தேவதாரு மரத்தடிகளை தூண்களென நாட்டி அவற்றின்மேல் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து குறுகிச் சென்று  பன்னிரு குவை மாடங்களாக மாறி கொடிகள் தாங்கி வான்நீலப் பகைப்புலத்தில் எழுந்து நின்றிருந்த ஏழடுக்கு மாளிகை லாடவடிவம் கொண்டிருந்தது. அதன் அணைப்புக்குள் இருந்த பெருமுற்றத்தில் மணத்தன்னேற்பு விழவுக்கு என போடப்பட்டிருந்த அணிப்பந்தல் காலை இளங்காற்றில் அலையிளகி கொந்தளித்தது. மாளிகையின் அனைத்து உப்பரிகைகளிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82925

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 1 மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று… நிறைய நாகர்களை கொன்று…” என்று சொன்னபடி கையிலிருந்த சிறிய மூங்கில் வில்லை எடுத்துக்கொண்டு குறுங்காட்டை நோக்கி ஓடினான். மரநிழல் ஒன்று அவனுக்குக் குறுக்கே விழுந்து நெளிய திகைத்து நின்று உடல் நடுங்கியபின் பறவை ஒலி போல் அலறி வில்லை கீழே போட்டுவிட்டு திரும்பி ஓடி வந்து மாலினியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79568

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28

பகுதி மூன்று : முதல்நடம் – 11 மீண்டும் தன்னை உணர்ந்த சித்ராங்கதன் திகைத்து எழுந்த விசையில் நீர்ப்புதர்த்தீவு சற்று அசைந்து நகர்ந்தது. ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கி “என்ன?” என்றாள். அவன் தொலைவில் ஒளி அலையடித்த ஏரிப்பரப்பை நோக்கியபடி இறுகி நின்றான். “சொல்லுங்கள்” என்றாள் ஃபால்குனை. “இல்லை” என்றபின் அவன் பெருமூச்சுவிட்டு “நான் மீள்கிறேன்” என்றான். “எங்கு?” என்றாள் ஃபால்குனை. “அரண்மனைக்கு” என்று அவன் அவளை நோக்காமலேயே சொன்னான். “என்ன?” அவள் மீண்டும் கேட்டாள். “நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79548

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27

பகுதி மூன்று : முதல்நடம் – 10 மணிபுரி நகரில் மிதக்கும் தீவுகளில் ஒன்றில் அமைந்த படைச்சாலையின் வாயிலில் ஃபால்குனை காத்திருந்தாள். அவளைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் கீழைக்காற்றில் நெளிந்த நீரின் பளிங்குக் கம்பளத்தின் பின்னல் அணிமலர்களென அசைந்து அமைந்து எழுந்தன. அவற்றுக்கு மேல் நிழல்பரப்பி பெரும் சிறகுகளை விரித்து இறங்கிய வெண் நாரைகள் வேர்கள் போன்ற சிவந்த நீண்ட கால்களை நீட்டியபடி அமிழ்ந்திறங்கி சங்கெனக் கூம்பி அமர்ந்து காற்றுக்கு சிறகு குலைத்து சமனழிந்து கழுத்தை வளைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79532

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26

பகுதி மூன்று : முதல்நடம் – 9 துணை அமைச்சர் அவள் அமரவேண்டிய மூங்கில் இருக்கையை காட்ட ஃபால்குனை அதில் ஆடை சீரமைத்து அமர்ந்தாள். மேலாடையை கையால் சுழற்றிப் பற்றி மடிமீது அமைத்துக்கொண்டு, தன் குழலை சற்றே தலை சரித்து முன்னால் கொண்டு வந்து தோளில் போட்டுக்கொண்டு, கால்களை ஒடுக்கி உடல் ஒசித்து அமர்ந்து அவையை நோக்கி புன்னகைத்தாள். அந்த அவையில் அவள் மட்டுமே இருப்பதுபோல் விழிகள் அனைத்தும் அவளை நோக்கி நிலைத்திருந்தன. சித்ராங்கதன் மட்டும் அவளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79493

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25

பகுதி மூன்று : முதல்நடம் – 8 மணிபுரத்தின் அரசர் சித்ரபாணனின் அரண்மனைக்குச் செல்வதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலைதான் ஃபால்குனையிடம் அளிக்கப்பட்டது. குறும்படகில் விருந்தினருக்கான மூங்கில்மாளிகையை அடைந்து மென்சுருள் கொடிகளில் மிதித்து ஏறி உள்ளே சென்றாள். அத்தீவு காற்றில் மெல்ல கிழக்கு நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவ்விந்தையை எண்ணி புன்னகைத்தாள். அங்கிருந்த ஏவலர் தலைவன் தலைவணங்கி “தாங்கள் இன்று இரவு இங்கு தங்கி இளைப்பாறவேண்டும் என்றும், நாளை காலை கதிர் எழுந்து, மந்தண மன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79447

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23

பகுதி மூன்று : முதல்நடம் – 6 இரண்டுநாட்கள் முற்றிலும் ஆழ்துயிலிலேயே இருந்த சித்ராங்கதன் மூன்றாம் நாள் மணிபுரநகரிக்கு திரும்பிச்சென்றான். கீழ்நாகர்கள் மீண்டும் படைகொண்டு வரக்கூடும் என்ற ஐயம் இருந்ததால் சித்ராங்கதனுடன் வந்த புரவிப்படை அவ்வூரிலேயே மேலும் பதினைந்துநாள் தங்கியது. அவர்களுடன் ஃபால்குனையும் இருக்கவேண்டும் என்று சித்ராங்கதன் ஆணையிட்டான். அதை தலைவணங்கி அவள் ஏற்றுக்கொண்டாள். அரிசிமது சித்ராங்கதன் மூச்சை சீர்படுத்தியிருந்தது. சிவமூலி அவனை அவனறியாத இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்று மீட்டுக்கொண்டு வந்திருந்தது. மயக்கில் இருந்து விழித்த சித்ராங்கதன் கையூன்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79310

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22

பகுதி மூன்று : முதல்நடம் – 5 ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும் அம்பறாத்தூணியையும் கழற்றி அவர்கள் முன் வைத்துவிட்டு அவள் படியேறி மேலே சென்றாள். படைத்தலைவர் வணங்கி “இவர் ஊர்த்தலைவர் சத்ரர்” என்றார். தலையில் அணிந்த பெரிய அணிச்சுருளில் செங்கழுகு இறகு சூடிய ஊர்த்தலைவர் வணங்கி “குருதிப்பெருக்கு இன்னமும் நிற்கவில்லை. பெரும் காயம்” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79257

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21

பகுதி மூன்று : முதல்நடம் – 4 மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர். முகப்பில் நின்ற மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல் பரணில் இருந்த இரு வீரர்களும் தங்கள் குறுமுழவுகளை விரைந்த தாளத்தில் ஒலிக்கத் தொடங்கினர். அந்த ஒலியில் ஊரின் அனைத்துக் குடில்களும் அதிர்ந்ததுபோல தோன்றியது. எக்குடியிலும் மானுடர் இருப்பதற்கான சான்றுகளே இல்லை என்பதுபோல அசைவின்மை இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79217

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20

பகுதி மூன்று : முதல்நடம் – 3 ஃபால்குனையின் இரு கைகளையும் பற்றி இழுத்துச் சென்று சித்ராங்கதனின் முன் நிறுத்தினர் வீரர். தலைமுதல் கால்விரல்வரை அவளை கூர்ந்து நோக்கியபடி சித்ராங்கதன் மாளிகையின் முகப்பில் இருந்து இரும்புக்குறடு மரப்படிகளில் ஒலிக்க மெதுவாக இறங்கி வந்து இடைவாள் பிடிக்குமிழில் கையை வைத்தபடி அவள் அருகே நின்றான். அப்பார்வையை உணர்ந்து தலைகுனிந்து, விழிசரித்து, இடை நெளிய கால்கட்டை விரலால் மண்ணை நெருடினாள் ஃபால்குனை. மெல்லிய குரலில் “இவள் எங்கிருந்து வந்தாள்?” என்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79203

Older posts «