Tag Archive: சித்ரரதன்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6

வீரசேனர் விழுந்ததை துஷாரர்களின் கொம்போசையிலிருந்து உத்தர கலிங்க மன்னர் சித்ராங்கதர் அறிந்தார். வீரசேனரின் பாகன் தேர்த்தட்டில் எழுந்து நின்று விழிநீருடன் தன் சங்கை வெறிகொண்டவன்போல் திரும்பத் திரும்ப ஊதினான். சூழ்ந்திருந்த துஷாரப் படையினர் “விண்ணெழுந்த வீரர் வெல்க! துஷார வீரசேனர் நிறைவுறுக! துஷாரச் செங்கோல் நீடுவாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். துஷாரர்களின் படைத்தலைவர்கள் பறைகளையும் கொம்புகளையும் முழக்கி கொடிகளை அசைத்து சிதறி சிறுகுழுக்களாக எஞ்சிய படைகளை ஒருங்கு திரட்டி மேலும் மேலும் பின்னுக்கிழுத்தபடி மையப்படைக்குள் சென்று அமைந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112803/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9

பகுதி இரண்டு : அலையுலகு – 1 கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான் பார்த்தன் அறிவிழி கொண்டவனானான். மானுடவிழிகள் புற ஒளியால் மட்டுமே பார்ப்பவை. அவன் விழிகள் அகஒளியாலும் பார்க்கும் வல்லமை கொண்டவை.” சுஜயன் தலையை தூக்கி அவள் கன்னங்களை தன் கையால்பற்றி திருப்பி “நான்… நான்… எனக்கு?” என்றான். “உனக்கு என்னடா செல்லம்?” என்றாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78920/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 8

பகுதி ஒன்று – கனவுத்திரை – 8 ஒரு கையில் குருதியும் மறு கையில் தழலுமென தன் எல்லை கடந்து வந்த இளைய வீரனை சித்ரரதன் தன் உடல்விழியால் அக்கணமே கண்டான். விழிமணி போல் இருளுக்குள் ஒளிவிட்ட அவன் உடல் அதிர்ந்தது. அவனுடன் பொன்னுடல் பொலிய காமக் களியாட்டிலிருந்த துணைவி கும்பீநசியும் கந்தர்வ கன்னியரும் அக்கணமே வண்ணச் சிறகுள்ள மீன்களாக மாறி நீருக்குள் மூழ்கி மறைந்தனர். அவர்களின் அச்சமும் நாணமும் நிறைந்த பதறும் சொற்கள் அவனைச் சுற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78867/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7

பகுதி ஒன்று : கனவுத்திரை – 7 காசியப பிரஜாபதிக்கு முனி என்னும் துணைவியில் பிறந்தான் சித்ரரதன். அன்னை அவனை ஈன்று தன்னருகே முகில் படுக்கையில் படுக்கவைத்து இனிய கனவில் துயின்றபோது விண் நிறைத்த பெருமுகில் குவையென குழல் அலைய இருவிண்மீன்களென விழிகள் கனிய குனிந்து மைந்தனை நோக்கினார் காசியபர். அவன் ஒளி ஊடுருவும் உடல் கொண்டிருந்தான். நீர்த்துளியென ததும்பிக் கொண்டிருந்த அவனை தன் சுட்டுவிரல் நீட்டி ஒற்றி எடுத்து தன் முகத்தருகே கொண்டு வந்து நோக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78831/

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29

இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில் மனிதர்களை ஊட்டி வளர்ப்பதற்காக பூமியன்னையே பசுக்களின் வடிவெடுத்து வந்தாள் என்றனர் முனிவர்கள். பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்றனர். ஆயர்களிலிருந்தே பிற அனைத்துக்குலங்களும் உருவாகி வந்தன என்று புராணங்கள் சொல்லின. ஆரியவர்த்தத்தின் ஆயர்குலங்களை யாதவர்கள் என்றனர். அவர்கள் யயாதியின் மைந்தனான யதுவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47091/