Tag Archive: சித்ரசேனர்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 52

[ 16 ] எதிர்பார்த்தது போலவே விசால நாட்டு மன்னர் சமுத்ரசேனரிடமிருந்து தமகோஷர் அனுப்பிய மணத்தூதை மறுத்து ஓலை வந்தது. தமகோஷர் தன் அவையில் அமர்ந்து தூதன் கொண்டுவந்த அந்த ஓலையை ஓலைநாயகத்திடமிருந்து வாங்கி மும்முறை சொல்கூர்ந்து வாசித்தபின் இதழ்கோட புன்னகைத்து அருகிலிருந்த அமைச்சரிடம் அளித்தார். குலமுறை கிளத்தல்களுக்கும் முறைமைச் சொற்களுக்கும் நலம் உசாவல்களுக்கும் பின்னர் தன் மகள் பத்ரைக்கு மாளவம், வங்கம் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் மணவிழைவுச் செய்திகள் வந்திருப்பதாகவும், தூயகுருதி கொண்ட ஷத்ரியர்களை மறுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87796

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 29

[ 11 ] சேதி நாட்டிலிருந்து சிசுபாலன் ஏழு வழித்துணைவர்களும் அமைச்சர் பாவகரும் உடன்வர கங்கைக்கரையை அடைந்து அங்கிருந்து புரவிகளில் கிளம்பி பின்னிரவில் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்தான். அவனுடைய வரவறிவிக்கும் பறவைச்செய்தி அன்று உச்சிப்பொழுதில்தான் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்திருந்தது. கோட்டை வாயிலுக்கே கனகர் வந்து அவனை முகமன் சொல்லி வரவேற்று அரண்மனைக்கு கொண்டு சென்றார். அவன் வரவு மந்தணமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தமையால் அமைச்சர்கள் செல்லும் எளிய கூட்டுத்தேரில் நகர்த்தெருக்களினூடாக எவரும் அறியாது சென்று அவனுக்கென அளிக்கப்பட்டிருந்த மாளிகையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87168