Tag Archive: சிசிரன்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77

பகுதி 16 : தொலைமுரசு – 2 சாத்யகி படகில் வேனில்மாளிகையை அடைந்தபோது பின்மதியம் ஆகியிருந்தது. குளிர்காலக்காற்று சூழ்ந்திருந்தாலும் படகின் அடியிலிருந்து கங்கையின் இளவெம்மை கலந்த ஆவி எழுந்துகொண்டிருந்தது. அவன் படகின் விளிம்பில் கால்வைத்து நின்றபடி நீரை நோக்கிக்கொண்டிருந்தான். ”நீந்துகிறீர்களா இளவரசே?” என்றான் குகன். “நீந்துவதா? படகிலேயே குளிர்தாளவில்லை.” “நீர் வெதுமை கொண்டிருக்கும். இப்போது நீந்துவதை வீரர் விரும்புவதுண்டு.” சாத்யகி “கங்கை எனக்கு பழக்கமில்லை” என்றான். குகன் சிரித்து “பழக்கமில்லை என்பதனாலேயே நீந்தும் வீரர்களும் உண்டு” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74111/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 15

பகுதி 5 : ஆடிச்சூரியன் – 2 மிருஷை நகுலனின் குழலை மூங்கில்களில் சுற்றி சுழற்றியபடி “அணிகொள்ளுதலைப்பற்றி உங்கள் மூத்தவர் மூவரிடமும் பேசினேன் இளவரசே” என்றார். நகுலன் அவரை நோக்கி விழிகளை தூக்கினான். அவரது மெல்லிய விரல்கள் அவன் தலையில் சிட்டுகள் கூட்டில் எழுந்தமர்ந்து விளையாடுவது போல இயங்கின. அவரது பணிக்கேற்ப அவரது உடல் வளைந்து அவன் உடலில் உரசிக்கொண்டிருந்தது. மிருஷை “அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்து கொண்டிருந்தனர்” என்றார். நகுலன் புன்னகையுடன் “ஆகவே?” என்றான். “தாங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70852/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12

பகுதி 4 : தழல்நடனம் – 2 சிசிரன் வந்து வணங்கியதை ஆடியிலேயே நோக்கி அர்ஜுனன் தலையசைத்தான். ஆடியில் நோக்குகையில் உடலெங்கும் பரவும் சினத்தை உணர்ந்தான். ஏனென்றறியாத அந்தச் சினம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் மஞ்சத்தில் புரண்டு புரண்டு படுத்து துயிலின்றி எழுந்தமர்ந்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்து மீண்டும் படுத்து விடியற்காலையில்தான் கண்ணயர்ந்தான். துயில் வந்து மூடும் இறுதிக்கணம் எஞ்சிய சினம்பூசப்பட்ட எண்ணம் அப்படியே விழிப்பின் முதல்கணத்தில் வந்து ஒட்டிக்கொள்வதன் விந்தையை ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொண்டான். நாளெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70752/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11

பகுதி 4 : தழல்நடனம் – 1 அணுக்கச்சேவகன் அநிகேதன் வந்து வணங்கியதும் அர்ஜுனன் வில்லைத்தாழ்த்தினான். “இளையவர் சகதேவன்” என்றான். அர்ஜுனன் தலையசைத்ததும் அவன் திரும்பிச்செல்லும் காலடியோசை கேட்டது. அந்த ஒவ்வொரு ஒலியும் அளித்த உளவலியை தாளாமல் அர்ஜுனன் பற்களைக் கடித்தான். பின் வில்லை கொண்டுசென்று சட்டகத்தில் வைத்துவிட்டு அம்புச்சேவகனிடம் அவன் செல்லலாம் என கண்காட்டினான். தன் உடலெங்கும் இருந்த சினத்தை ஏதும் செய்யாமல் இருக்கும்போதுதான் மேலும் உணர்ந்தான். மரவுரியால் முகத்தைத் துடைத்துக்கொண்டு சென்று பீடத்தில் அமர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70719/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 8

பகுதி 3 : பிடியின் காலடிகள் – 2 சிசிரன் பின்னால் வந்து நின்ற ஒலி கேட்டு பீமன் திரும்பிப்பார்த்தான். சிசிரன் மெல்ல வணங்கி, “இளவரசி இன்னும் கிளம்பவில்லை. இன்று எழுபிறை நான்காம் நாள். அரண்மனையின் காவல் யட்சிக்கென சில பூசனைகள் உள்ளன” என்றான். பீமன் தலையசைத்தான். இன்று நான்காம் நிலவா என்று எண்ணியபடி வானைநோக்கினான். செம்மை அவிந்து இருள்திட்டுகளாக முகில்கள் மாறிக்கொண்டிருந்தன. எங்கும் நிலவை காணமுடியவில்லை. சிசிரன் “இளவரசர் விழைந்தால் சூதர்கள் பாடுவார்கள். இளவரசி வருவதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70536/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 6

பகுதி 2 : ஆழ்கடல் பாவை – 3 காலையில் சிசிரன் வந்து அழைத்தபோதுதான் தருமன் கண்விழித்தான். முதலில் எங்கிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. உணர்ந்ததும் அங்கே சிசிரன் வந்ததைப்பற்றி சிறிய சீற்றம் எழுந்தது. ஆனால் அவன் உள்ளே வராமல் கதவுக்கு அப்பால் நின்றுதான் தட்டி அழைத்திருந்தான். ஆடையை பற்றி அணிந்தபடி எழுந்து நின்று சற்றே அடைத்த குரலில் “என்ன?” என்றான். “அமைச்சர் வந்துள்ளார்” என்றான் சிசிரன். “எந்த அமைச்சர்?” என்று கேட்டதுமே அவன் நெஞ்சு அதிரத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70407/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5

பகுதி 2 : ஆழ்கடல் பாவை – 2 சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த கடலாழத்தில் தருமன் அமர்ந்திருந்தான். அலைகளின் ஒளி கண்களுக்குள் புகுந்து உடலெங்கும் நிறைந்து அவனை கரைத்து வைத்திருந்தது. நீர்ப்பாசியென அவன் உடல் நீரொளியுடன் சேர்ந்து தழைந்தாடியது. அப்பால் கங்கைக்குமேல் வானம் செந்நிறம் கொண்டது. நீரலைகளின் நீலம் செறிந்து பசுங்கருமை நோக்கிச் சென்றது. அலைகளோய்ந்து கங்கை பல்லாயிரம் கால்தடங்கள் கொண்ட பாலைநிலப்பரப்பு போல தெரிந்தது. பெருவிரிவுக் காட்சிகள் ஏன் சொல்லின்மையை உருவாக்குகின்றன? உள்ளம் விரிகையில் ஏன் இருப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70323/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 4

பகுதி 2 : ஆழ்கடல் பாவை – 1 நீலவண்ண உலோகத்தாலான மாபெரும் வில் என வளைந்து சென்ற கங்கையின் கரையில் நீர்வெளியை நோக்கித்திறக்கும் நூறு பெருஞ்சாளரங்களுடன் மலர்மரங்கள் செறிந்த சோலை சூழ அமைந்திருந்த காம்பில்யத்தின் இளவேனிற்கால அரண்மனையின் தென்றல்சாலையில் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். சாளரத்தின் பொன்னூல் பின்னலிட்ட வெண்திரைச்சீலைகள் கங்கைக்காற்றில் நெளிந்தாடிக்கொண்டிருக்க அறைக்குள் நீர்வெளியின் ஒளி மெல்லிய அலையதிர்வுடன் நிறைந்திருந்தது. வெண்சுண்ணம் பூசப்பட்டு சித்திரமெழுதப்பட்ட மரச்சுவர்களும் ஏந்திய கைகள் என கூரையைத் தாங்கும் சட்டங்களுடன் நிரைவகுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70282/