Tag Archive: சிங்கப்பூர்

கலை இலக்கியம் எதற்காக?

  அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன் சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12

எரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள். முகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய பற்களுடன் பெரியம்மாள்கள் கார்களை கூர்ந்து நோக்கினர். எரிமலை மக்கள். அந்த எரிமலையை அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடித்தாலும் அதுதான் சோறுபோடுகிறது அவர்களுக்கு. [ராஜமாணிக்கானந்தா] இன்றையநாளுடன் யோக்யகர்த்தா பயணம் முடிவுக்கு வருகிறது. செறிவான களைப்பூட்டும் பயணம் .ஆனால் பயணக்களைப்பு போல இனியது வேறில்லை.ஒவ்வொரு பயணமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80929

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 3

முப்பத்தொன்றாம் தேதி முழுக்க நிகழ்ச்சிகள். காலையில் விடுதியிலிருந்து எனக்கான தொடர்பாளர் கௌதம் வந்து அழைத்துச்சென்றார். லிட்டில் இந்தியா பகுதியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கலைமையத்தில் ஒரு பயிற்சி அரங்கு. காட்சியூடகத்திற்காக எழுதுவதைப்பற்றி. நாற்பதுபேர் வந்திருந்தனர். நான் பாபநாசம் போன்ற வணிகப்படங்களுக்கும் ஒழிமுறி போன்ற போன்ற நடுப்போக்குப் படங்களுக்கும் எழுதுவதில் என் அனுபவங்களைப்பற்றிச் சொன்னேன். விவாதம் நிகழ்ந்தது சாப்பிட்டுவிட்டு நான் அறைக்குச்சென்று சற்று ஓய்வெடுத்தேன். வெண்முரசு எழுதினேன். மாலையில் கௌதம் வந்து அடுத்த சந்திப்புக்கு கூட்டிச்சென்றார். நா.முத்துக்குமார், சிங்கப்பூர் எழுத்தாளர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80536

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 2

  சிங்கப்பூரில் கேளிக்கையிடங்களுக்குப் போவதைப்பற்றிச் சொன்னபோது ஒருநண்பர் கேட்டார், வெண்முரசு எழுதும் மனநிலைக்குக் குறுக்காக அதில் ஈடுபடுவது கடினமாக இல்லையா என்று. உண்மையில் வெண்முரசு எழுதும் மனநிலையை அவ்வகை கேளிக்கைகள் வளர்க்கின்றன. நடைமுறை வாழ்க்கைசார்ந்த கணக்குவழக்குகள், உறவுச்சிக்கல்கள் மட்டுமே கடினமானவை. மேலும் அறிவியல் சார்ந்த நவீனக் கேளிக்கைகள் மீது எனக்கு ஒரு பெரிய ஈர்ப்புண்டு. அவை கற்பனையின் புதிய சாத்தியங்களைத் திறக்கின்றன.   29 ஆம்தேதி நாங்கள் செந்தோசா தீவுக்குச் சென்றோம். சிங்கப்பூரின் கேளிக்கைத்தீவு. செந்தோசாவின் சுழன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80514

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1

அமெரிக்காவில் பயணம்செய்தபோது ராலே நகர் அருகே ஓடும் நதியின் கரையைப் பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் ராஜன் சோமசுந்தரமும் அவரது மனைவி சசிகலாவும் உடனிருந்தார்கள். அங்கு ஓரு பெண்மணி எங்களுக்கு அவரே முன்வந்து வழிகாட்டியாக பணிபுரிந்து உதவினார். பணம்பெற்றுக்கொள்ளாமல் அங்கு வருபவர்களுக்கு அங்குள்ள இயற்கையை அறிமுகம் செய்வது அவரது பொழுதுபோக்கு. தொழில்முறையாக அவர் ஆசிரியை. இயற்கைப்பாடம் நடத்துபவர். குழந்தைகளுக்கு இயற்கையைக் கற்பிப்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. மிக நுட்பமான தகவல்களை தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்தார் அவரிடம் பேசும்போது நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80456

இசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை

இசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூருக்கு வருகை தருகிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6794

விமரிசகனின் தடுமாற்றங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு. தாங்கள் தாங்கள் முக்கிய எழுத்தாளர்களாக சிங்கையில் இந்திரஜித்தையும் மலேசியாவில் பாலமுருகனையும் குறிப்பிட்டீர்கள். என்ன சார் இது. எனக்கு தெரிந்த தரம் உங்களுக்குத் தெரியவில்லையா? இந்திரஜித் ஒரு தமாஸ் எழுத்தாளர் என தெரியவில்லையா? அது கிடக்கட்டும் போங்கள்.பாலமுருகன் பின் நவீனத்துவம் என தனக்குத்தெரியாத விசயங்களை புளோக்கில் உளறிக்கொட்டுவதை நீங்கள் படிப்பதில்லையா?

Permanent link to this article: https://www.jeyamohan.in/6722