Tag Archive: சிக்குன்குனியா

சிக்குன்குனியா

இன்று காலை பத்துமணிக்கு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன். பயணம் முடிந்து வீடுவருவதன் வழக்கமான பரவசம். அருண்மொழிக்கு சிக்கின்குனியா ஓரளவு சரியாகிவிட்டிருக்கிறது. கால்களில் வீக்கம் இருக்கிறது. வலி குறைவுதான். காய்ச்சல் நான்குநாட்களுக்குத்தான் இருந்தது. அவள் முதல் இருநாட்களுக்குப் பின்னர் எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை.நிறைய தண்ணீர் குடித்து ஓய்வெடுப்பதுடன் சரி.   பக்கத்துவீட்டு பாட்டிக்கும் தாத்தாவுக்கும் சிக்குன்குனியா தாத்தாபெயர் ஸ்ரீகுமாரன் நாயர். வேதாந்தி. அவருக்குத்தான் என் இந்தியஞானம் நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். இந்தப்பகுதியில் ஏறத்தாழ பாதிப்பேருக்கு சிக்கின்குனியா வந்து செயலூக்கமிழந்து வாழ்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6434