Tag Archive: சிக்கிம்

சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம் ஆகிய ஏழு வடகிழக்கு மாகாணங்கள் ஏழுசகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாகாணங்கள் அனைத்திற்கும் உள்ள பொது அம்சம் என்பது இவை அனைத்துமே பழங்குடிகளுக்குரியவை என்பது. மகாபாரதகாலம் முதல் அறியப்பட்ட ஒரே பழங்குடிப்பகுதி மணிப்பூர்தான். பிற நிலப்பகுதிகள் அப்போது மக்கள் வாழாத அடர்காடுகளாக இருந்திருக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71801

பூட்டான், குழந்தைகள்

’வெட்கப்படுமளவுக்கு ஒரு புகைப்படம் முக்கியமான விஷயம்தானா?’ – ஒரு சின்னக் குழப்பம் ’அவ்ளோத்தையும் திம்பேன்’ . கைநீட்டிய யுவன் சந்திரசேகருக்கு ஓங்கி ஓர் அறை. பெயர்? ஆம், பேமா   ’மூன்று  பூட்டானியர்கள்’. பெயர் கேட்டால் பெயர் தந்தைபெயர் குலம் ஊர் என நான்கு சொற்களாக மொத்த விலாசத்தையுமே சொல்கிறார்கள். கங்காரு. உறை பின்பக்கம் இருக்கிறது. சாலையிலே ஒரு பூவுடன் எதிரே வந்தவள், அழகிகள் வாழ்விலே இதெல்லாம் சகஜம் என்று போஸ் கொடுத்தாள். புகைப்படங்களின் முழுத்தொகுப்பு https://picasaweb.google.com/vishnupuram.vattam/BhutanSikkimJeyamohan  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16789

அந்தப்பெண்கள்…

  அகன்ற கண் அழகு என்று ஈராயிரம் வருடங்களாகக் கற்ற மனம் சில கணங்களிலேயே திருத்திக்கொண்டது. கண்கள் வழியாகத் தெரிவது எதுவோ அதுவே அழகு. அது இளமை என்றால் உற்சாகம் என்றால் கனிவு என்றால் இரு ஜொலிக்கும் வைரங்களே போதுமே. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு உடை உருவாகி வந்துள்ளது. சூடும் குளிரும்தான் அவற்றைத் தீர்மானித்துள்ளன என்பவர்கள் சமூகவியலாளர்கள். அவர்கள் நாசமாகப் போகட்டும். பெண்களையும் குழந்தைகளையும் தீராது கொஞ்சும் மானுட அழகுணர்வல்லவா அவற்றை உருவாக்கியிருக்கிறது?   எந்த உடையிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16788

வடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி

கிருஷ்ணனின் பயணத்திட்டத்தில் சிக்கிமில் பார்க்கும்படியாக இருந்தது யும் தாங் சமவெளி மட்டுமே. அது மலர்களின் சமவெளி என்று இணையம் சொன்னதாம். அதிகாலையில் ஐந்தரை மணிக்குக்  கிளம்பவேண்டும் என்று திட்டம். நான் என் செல்பேசியில் ஐந்துமணிக்கு எழுப்பியை அமைத்துவிட்டுத் தூங்கினேன். காலையில் கண்விழித்தால் வெளியே நல்ல வெளிச்சம். எழுப்பி வேலைசெய்யவில்லை. ஆனால் நேரத்தைப் பார்த்தால் அதிர்ச்சி. நான்கு மணி. ஆம் அதற்குள் நல்ல வெளிச்சம் வந்துவிட்டிருந்த்து. இங்கே குளிர்காலத்தில் எட்டு மணிக்குத்தான் கைவெளிச்சம் வரும். கோடையில் மூன்றரை மணிக்கு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16775

வடகிழக்கு நோக்கி 3- காங்டாக்

காங்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம். மலைநகரமும். மலைநகர்களுக்குரிய சிறப்பம்சம் என்பது அவை நடப்பதற்குரியவை என்பதே. இளங்குளிரும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதையும் நடப்பதை ஆனந்தமான அனுபவமாக ஆக்கும். ’மலைநகரங்களின் அரசி’[?]யான ஊட்டி அவ்வகையில் மிக வசதியற்ற நகரம், நகருக்குள் எங்குமே நடந்து அலைய முடியாது. நெரிசல், புகை, சந்தடி. திட்டமிட்டு மக்களாலும் அரசாலும் சீரழிக்கப்பட்ட சுற்றுலாத்தலம் அது.காங்டாக்கில் களைத்து வந்திறங்கியபோதிலும் மலைநகரங்களுக்குரிய உற்சாகம் ஊட்டி நடக்கச்சொன்னது From Sikkim jeyamohan எங்கள் விடுதி மாண்டரின் பாரடைஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16773