அன்புள்ள ஜெ மோ தங்களது தென்கரை மகராஜா பற்றிய பதிவு பார்த்தேன். அதில் சாஸ்தா சிலை யோக உபவிஷ்ட நிலையில் உள்ளதாக எழுதி இருந்தீர்கள். எனது குல தெய்வமான வாகைக்குளம் சாஸ்தாவும் அதே போலத் தான் இருக்கிறார். (வாகைக்குளம் நாங்குனேரிக்கு அருகில் உள்ளது). யோக பட்டம் விலகி இருக்கிறது. வலது காலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டும், இடது காலைக் குத்துக்கால் இட்டுக் கொண்டும் இருக்கிறார். இது தான் யோக உபவிஷ்ட நிலை என்பதா? இதைப் பற்றி சிறிது …
Tag Archive: சாஸ்தா
Permanent link to this article: https://www.jeyamohan.in/29693
சாஸ்தா
அன்புள்ள ஜெ, சம்ஸ்கிருதம் பற்றி சராசரி தமிழ் மனதில் பொதுவாக உருவாகியிருக்கும் தவறான பிம்பங்களையும், புரிதல்களையும் களையும் வகையில் அருமையாக பதிலளித்திருக்கிறீர்கள். (நாட்டார் தெய்வங்களும் சமஸ்கிருதமும்) மிக்க நன்றி. சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. இல்லை. ஐயப்பன் குறித்த சம்ஸ்கிருத புராணங்கள், தோத்திரங்கள்,ஐதிகங்கள் குறைந்தது 8-9 நூற்றாண்டுகளாவது பழையவை. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணம் என்னும் புராணத்தில் பூதநாதோபாக்கியானம் என்னும் பகுதியில் இன்று கேரளத்திலும், தமிழகத்திலும் பிரபலமாக உள்ள ஐயப்பன் சரித்திரம் கூறப்படுகிறது. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/22488