Tag Archive: சார்வாகன்

அஞ்சலி சார்வாகன்

sarvakan

  சார்வாகனின் கதை ஒன்றை கணையாழியில் எண்பதுகளில் வாசித்தேன். யானையின் சாவு என்னும் அந்தக்கதை அன்று உற்சாகமான வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருந்தது. குழந்தைகளின் உளவியலுக்குள் இயல்பாகச் சென்ற கதை. அவரைப்பற்றி சுந்தர ராமசாமி என்னிடம் பேசினார். அவர் எழுத்தாளர் என்பதை விடவும் தொழுநோயாளிகளின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சமூகசேவகர் என்னும் வகையிலேயே முக்கியமானவர் என்றார். சார்வாகன் அதிகம் எழுதியதில்லை. சார்வாகன் கதைகள் என ஒரு தொகுதியை நற்றிணை வெளியிட்டுள்ளது. இன்றைய வாசகருக்கு செக்காவ் காலத்தையவை என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82172

வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி [ 4 ] அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான் வாசிப்பது வழக்கம். பீடத்திலிருக்கும் சுவடிக்கட்டில் ஏதேனும் ஒன்றை எடுத்து விரித்து அதன் சொற்களுக்குள் நுழைவான். ஒவ்வொரு கவிதைவரியையும் ஐந்துமுறை அகத்தில் சொல்லிக்கொண்டே கடந்துசெல்வான். அன்றைய அல்லல்கள், மறுநாளைய கவலைகள் அனைத்தின்மேலும் அழுத்தமான மணல்போல அச்சொற்கள் படியும். பலசமயம் அல்லல்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49189

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52

பகுதி பத்து : அனல்வெள்ளம் [ 5 ] பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு காலைச்செவ்வொளி விரிந்த மங்கலவேளையில் நெற்றிப்பட்டமும் மணிப்படாமும் சத்ரமும் வெண்சாமரமும் அணிசேர்க்க பூத்த மலைமேல் கதிரவன் முளைத்ததுபோல பொன்னிற அம்பாரியுடன் அசைந்து அசைந்து வந்த முதுபெருங்கரிமேல் ஏறிவந்த தலைமை நிமித்திகன் அந்தத் திருமுகத்தை வாசித்து அறிவித்தான். அந்தச்செய்தி முன்னரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48516