Tag Archive: சாருநிவேதிதா

சீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்

சீரோ டிகிரியை மதிப்பிட மிகுந்த தடையைத் தருவது சாருநிவேதிதா மிகுந்த பிரக்ஞையுடன் பல்வேறு உத்திகள் மூலமாக உருவாக்கிக் கொள்ளும் சுய பிம்பம்தான். இப்பிம்பத்தைக்கூட சாருநிவேதிதாவால் இன்றுவரை திறம்பட உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது என் கருத்து. இதைமுதலில் நான் அவதானித்தது பத்து வருடம் முன்பு, சென்னையில் ஒரு கூட்டத்தில் நான் பேசிய பிறகு கேள்வி கேட்க எழுந்த சாருநிவேதிதா ‘கேள்வியுரை’ நிகழ்த்தியபோதுதான்! நான் படித்திராத-அதன் மூலம் இலக்கியம் பேசும் தகுதியை இழந்துவிட நேர்ந்த-லத்தீன் அமெரிக்க நூல்களின் பட்டியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5634

சாருவின் வசைகள்

டியர் சார் தம்மம்பட்டியிலிருந்து ராகவேந்திரன் நலம் நலமே விழைக இன்னொரு வெளிநாட்டு பயணத்திற்கு(புண்ணிய பூமி)  எனது வாழ்த்துக்கள். நிற்க, உங்களது வலை தளம் மற்றம் சாரு நிவேதிதாவின் இணைய தளம் இரண்டையும் தினமும் தவறாது வாசிக்கும் வாசகன் ஆவேன். நானும் கடந்த 6 மாதகாலமாக கவனித்து வருகிறேன். உங்களை சாடுவதினை மட்டுமே  குறியாக இருக்கிறார். அதிலும் எழுத்தாளர்கள் யாராகிலும் இறந்தால் தாங்கள் தெரிவிக்கும் அஞ்சலி கட்டுரையினை கூட அவர் பகடி செய்திருப்பது மிகவும் அருவருப்பாக உள்ளது. அதிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2996

சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் உங்கள் எழுத்துக்களை கவனித்து வருபவன் நான் என நீங்கள் அறிவீர்கள். உங்கள் இணையதளத்தில் எழுதப்பட்ட வன்முறையின் தோல்விஎன்ற கட்டுரை முக்கியமானது. பொதுவான மனநிலைகளில் இருந்து விலகி எது மனதுக்குச் சரி என படுகிறதோ அதைச் சொல்லும் துணிவு உங்கள் பலம். அதை இக்கட்டுரையிலும் கண்டேன். இக்கட்டுரையின் உணர்வும் கருத்தும் என்னுடையதாகவே இருந்தது என்பதனால் இதை எழுதுகிறேன். மானுட வாழ்க்கையின் அருமையை உணர்ந்தவன், அதனாலேயே மக்கள் மேல் தீராத பரிவுள்ளவனே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2764

ஒரு குட்டிக்கதை

அன்புள்ள ஜெயமோகன் சாரு ஆன்லைன் என்ற இணையதளத்தில் சாரு நிவேதிதா என்பவர் உங்களை மோசமாக தாக்கி எழுதிக் கொண்டே இருக்கிறாரே. ஏன்? சரவணன் * அன்புள்ள சரவணன், அடாடா, இணையத்திலும் இப்படி பால் வடியும் வாசகர்களா? மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பிள்ளைமனம் மகிழ ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா? ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு யானை இருந்ததாம். பெரீய யானை. அந்த யானை தும்பிக்கையும் தந்தமுமாக ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ அலைந்து கொண்டிருப்பதை அந்த காட்டிலே இருக்கும் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/519

சாரு

சாரு நிவேதிதா என்று ஒருவர் இல்லை. அது புனைவு என்பதே ஆய்வாளரின் துணிபு. அப்புனைவை உருவாக்குபவரது பவேறு வகையான எழுத்துக்களில் இருந்து இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு வாசக கவனத்துக்காக அளிக்கப்படுகின்றது.   சாரு நிவேதிதா டிசம்பர் மாதமானால் பாரீஸ் கார்னருக்குச் சென்றுவிடுவார். துரதிருஷ்டவசமாக டிசம்பரில்தான் சென்னையில் புத்தகக் கண்காட்சியும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களும் நடக்கின்றன. பாரீஸிலிருந்து அவர் இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் வந்துகொண்டிருக்க முடியாது. எல்லா இலக்கியக் கூட்டங்களும் அவருக்கு பெரும் சலிப்பையே உருவாக்குகின்றன. காரணம் எல்லாமே ஒரே மாதிரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/324