Tag Archive: சாரல் விருது

சாரல் உரை -கடிதம்

அன்பு ஜெயமோகன், இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள். திலீப்குமார், அசோகமித்திரன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன், விக்கிரமாதித்யன் என சாரல் விருது பெற்ற படைப்பாளுமைகளைக் கவனித்தாலே அவ்விருதின் நேர்மைத்தன்மை புலப்படும். சமீபமாய் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட ஞானக்கூத்தனை 2010லேயே கொண்டாடியவர்கள் ஜேடியும் ஜெர்ரியும். அச்சகோதரர்களை மனதார வாழ்த்துவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69192

விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது

2014-ஆம் ஆண்டுக்கான சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விருது வரும் ஜனவரி 25 அன்று சென்னை புக்பாயிண்ட் அரங்கில் [ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில் அண்ணாசாலை] நிகழும். நேரம் மாலை ஆறுமணி. இவ்விருது ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. ஜேடி ஜெர்ரி இருவரும் இவ்விருதை அவர்களின் பெற்றோர் பேரில் வழங்குகிறார்கள். விக்ரமாதித்யன் தமிழின் முக்கியமான நவீனகவிஞர்களில் ஒருவர். அவரது தனித்துவமும் பங்களிப்பும் தமிழ்க்கவிதையை வளப்படுத்தியவை. தமிழ்நவீனக்கவிதை படிமவியலை தன் முதன்மை அழகியலாகக் கொண்டது என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்ட் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45202

பிரபஞ்சனுக்குச் சாரல் விருது

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் – வண்ணநிலவன் ஆகியோருக்கு இது சென்ற வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பிரபஞ்சனுக்கு வழங்கப்படவுள்ளது வரும் ஜனவரி 26 அன்று சென்னையில் உள்ள ஆர்கெ கன்வென்ஷன் செண்டர், 146, ஓம்ஸ் லக்சனா, [மேல்மாடி] shaws show room மேலே , லஸ் கார்னர் அருகில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34041

சாரல் விருது

ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது. நாஞ்சில்நாடன், பா.செயப்பிரகாசம்,எஸ்.ராமகிருஷ்ணன், நா.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.விழாவில் ஜேடி ஜெர்ரி இயக்கிய வண்ணதாசனின் ஜன்னல் கதையை ஒட்டிய குறும்படம் வெளியிடப்படும் வண்ணதாசன் வண்ணநிலவன் இருவருக்கும் வாழ்த்துக்கள் சாரல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23173

சாரல் விழா உரை

ஒரு காலத்தில் மீசையுடன் இருந்தபோது திலீப் குமாருக்கு சாரல் விருது கொடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை httpv://www.youtube.com/watch?v=G12NmW1AQKE httpv://www.youtube.com/watch?v=PXWq3Ghqiz0        

Permanent link to this article: https://www.jeyamohan.in/21728

அசோகமித்திரனுக்கு சாரல் விருது

2010 ஆண்டுக்கான சாரல் இலக்கியவிருது அசோகமித்திரனுக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு விருதும் தமிழிலக்கியம் தன்னை கௌரவித்துக்கொள்வதுதான். இயக்குநர்கள் ஜெடி-ஜெர்ரி அவர்கள் தங்கள் பெற்றோர் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் டிரஸ்டுக்காக இந்த விருதை அளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாசகனாக என் வாழ்த்துக்கள். அசோகமித்திரனுக்கு என்றுமுள்ள வணக்கம் இணைப்புகள் 2009 சாரல் விழா கருங்குயில் குன்றத்து கொலை சாரல் விருது 2009 படிப்பறை படங்கள் சென்னை சித்திரங்கள் ஆட்கொள்ளல் அசோகமித்திரனைச் சந்தித்தல் அசோகமித்திரன் கடிதங்கள்’ அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11389

ஞானக்கூத்தன்

தமிழின் புதுக்கவிதை இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுவந்த கவிஞர் ஞானக்கூத்தன். ஒரு பரிசோதனை முயற்சியாக எழுத்து இதழில் அரங்கேறிய புதுக்கவிதை அவரும் நண்பர்களும் அடங்கிய கசடதபற வழியாகவே விரிவான சாத்தியக்கூறுகளைக் கண்டடைந்தது. எள்ளலையும் வெறும் சித்தரிப்புகளையும் குட்டிக்கதைகளையும் எல்லாம் கவிதை கையாளலாம் என்று அது காட்டியது. புதுக்கவிதைமொழி  எழுத்துவில் அமர்ந்தது, கசடதபறவில் இலகுவாக சாய்ந்துகொண்டு காலாட்ட ஆரம்பித்தது எனலாம். ஞானக்கூத்தன் இன்றுவரை முக்கியமான விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. அவரது கவிதைகளோ தலைமுறைகளைத் தாண்டி இன்றும் நினைவில் புன்னகைகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6378